வேலூர் கோட்டையை சீரமைக்கும் பணிகள் தீவிரம்

தூய்மை இந்தியா திட்டத்தின் கீழ் வேலூர் கோட்டையை சீரமைக்கும் பணி தீவிரப்படுத்தப் பட்டுள்ளது.

Update: 2018-04-18 22:38 GMT
வேலூர்,

கண்டி மகால் கட்டிடம் விரைவில் பொதுமக்கள் பார்வைக்காக திறக்கப்பட உள்ளது என அதிகாரிகள் தெரிவித்தனர்.

வேலூரின் மையப்பகுதியில் கோட்டை அமைந்துள்ளது. கி.பி. 16-ம் நூற்றாண்டில் விஜயநகரப் பேரரசு காலத்தில் கட்டப்பட்ட வேலூர் கோட்டை வேலூருக்கு இன் றும் பெருமையும் சேர்க்கின் றது. கோட்டைக்குள் திப்பு மகால், ஐதர் மகால், பாஷா மகால், கண்டி மகால், பேகம் மகால் ஆகிய பழமை வாய்ந்த கட்டிடங்கள் அமைந்துள்ளன.

மேலும் ஜலகண்டேஸ்வரர் கோவில், தேவாலயம், மசூதி, அரசு அருங்காட்சியகம், போலீஸ் பயிற்சி பள்ளி, பொதுப்பணித்துறை உள்பட அரசின் பல்வேறு துறை அலுவலகங்களும் இங்கு உள்ளன.

பல்வேறு வரலாற்று தகவல் களை கொண்ட கோட்டை கட்டிடங்களை சீரமைப்ப துடன், சுற்றுலா பயணிகளை கவரும் வகையில் கோட்டையை மேம்படுத்த தொல்லியல் துறை யினர் திட்டமிட்டுள்ளனர். முதற்கட்டமாக கோட்டை வெளிமைதானம் பூங்காவாக மாற்றியமைக்கும் பணி தீவிரமாக நடந்து வருகிறது. மேலும் மக்கான் சிக்னலை ஒட்டியுள்ள பூங்காவும் சீரமைக் கப்பட உள்ளது. இப்பணியில் தொல்லியல்துறை, சுற்றுலாத் துறை, மாநகராட்சி ஊழியர்கள் ஈடுபடுத்தப்பட உள்ளனர்.

தற்போது ‘தூய்மை இந்தியா’ திட்டத்தின் கீழ் கோட்டையை சுத்தப்படுத்தும் பணிகள் நடந்து வருகிறது. இப்பணியில் மாநகராட்சியை சேர்ந்த 30 பணியாளர்கள், தொல்லியல் துறை சார்பில் 100-க்கும் மேற்பட்டவர்கள் ஈடுபட்டுள் ளனர். நேற்று கோட்டை அகழியை தூய்மைப்படுத்தும் பணி தொடங்கியது. வேலூர் கோட்டை சீரமைக்கும் பணிகள் வருகிற 30-ந் தேதி வரை நடக்கிறது.

இலங்கையை ஆண்ட கடைசி தமிழ் மன்னன் விக்கிரமராஜசிங்கன் மற்றும் அவரது குடும்பத்தினர் சிறை வைக்கப்பட்டிருந்த கண்டி மகால் கட்டிடம் கோட்டைக் குள் உள்ளது. அந்த கட்டிடமும் சீரமைக்கப்பட உள்ளது. வேலூர் பத்திரப்பதிவு அலுவலகமாக இயங்கி வந்த கண்டி மகால் கட்டிடம் தொல்லியல்துறையினரிடம் ஒப்படைத்த பின்னர் சீரமைப்பு பணிகள் தொடங்கும். அதன்பின்னர் விக்கிரமராஜசிங்கன் குறித்த வரலாற்று தகவல்கள், ஓவியங்களுடன் விரைவில் கண்டி மகால் கட்டிடம் பொதுமக்கள் பார்வைக்காக திறக்கப்படும் என தொல்லியல் துறை அதிகாரிகள் தெரிவித்தனர். 

மேலும் செய்திகள்