ஆதார், ஸ்மார்ட் கார்டுகளில் திருத்தம் செய்ய முடியாமல் பொதுமக்கள் அவதி
இ-சேவை மையங்களில் தொழில்நுட்ப கோளாறினால் பொதுமக்கள் அவதியுருவதால் உடனடி நடவடிக்கை எடுக்க கோரிக்கை எழுந்துள்ளது.
கோவை,
இ-சேவை மையங்களில் தொழில்நுட்ப கோளாறு காரணமாக ஆதார், ஸ்மார்ட் கார்டுகளில் திருத்தம் செய்ய முடியாமல் பொதுமக்கள் அவதிப்படுகிறார்கள். எனவே உடனடி நடவடிக்கை எடுக்க கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
சாதி சான்றிதழ், இருப்பிட சான்றிதழ், வருமான சான்றிதழ் உள்பட முக்கியமான சான்றிதழ்களுக்கு விண்ணப்பிக்க முன்பு கிராம நிர்வாக அலுவலர்கள், வருவாய் ஆய்வாளர் உள்பட அதிகாரிகளை தேடி செல்ல வேண்டும். இதனால் பொதுமக்கள் பெரிதும் சிரமம் அடைந்தனர்.
அவர்களின் சிரமத்தை போக்கும் வகையில் இ-சேவை மையங்கள் தொடங்கப்பட்டன. இந்த மையங்களில் சாதி சான்றிதழ், இருப்பிட சான்றிதழ், வருமான சான்றிதழ், முதல் பட்டதாரி சான்றிதழ், வேலையில்லா பட்டதாரி சான்றிதழ், விதவை சான்றிதழ், குடும்ப உறுப்பினர்களுக்கான சான்றிதழ், விவசாயிகளுக்கான சான்றிதழ் உள்பட பல்வேறு சான்றிதழ்களை பெற விண்ணப்பிக்கலாம்.
அதுபோன்று ஆதார் கார்டுகள், ஸ்மார்ட் ரேஷன் கார்டுகள் ஆகியவற்றுக்காக விண்ணப்பிப்பதுடன், அவற்றில் தவறு இருந்தால் அதை திருத்தம் செய்யவும், முகவரி மாற்றம் செய்யவும் இ-சேவை மையங் கள் மூலம் விண்ணப்பிக்கலாம்.
கோவை மாவட்டத்தில் உள்ள 10 தாலுகா அலுவலகங்கள், மாவட்ட கலெக்டர் அலுவலகம், கோவை மாநகராட்சி அலுவலகம், மாநகராட்சியில் உள்ள 5 மண்டல அலுவலகங்கள், கூட்டுறவு மையங்கள் ஆகிய இடங்களில் இ-சேவை மையங்கள் செயல்பட்டு வருகின்றன.
விடுமுறை நாட்களை தவிர மற்ற நாட்களில் தினமும் காலை 10 மணி முதல் மாலை 6 மணி வரை இந்த மையங்கள் செயல்பட்டு வருகின்றன. இதனால் இங்கு எப்போதுமே பொதுமக்கள் கூட்டம் அதிகமாக இருப்பதை பார்க்க முடியும். கடந்த ஒரு வாரமாக புதிதாக சான்றிதழ் மற்றும் ஆதார் கார்டு, ஸ்மார்ட் ரேஷன் கார்டு ஆகியவற்றை பெற மட்டுமே விண்ணப்பிக்க முடிகிறது. ஆனால் அதில் தவறு எதுவும் இருந்தால் திருத்தம் செய்யவோ அல்லது முகவரி மாற்றம், பெயர் மாற்றம் செய்யவோ முடியவில்லை. அதுபோன்று பிரிண்ட்டும் எடுக்க முடியவில்லை. இதனால் பொதுமக்கள் அவதியடைந்து வருகின்றனர்.
இது குறித்து இ-சேவை மையங்களுக்கு வந்து ஏமாற்றத்துடன் திரும்பிச்செல்லும் பொதுமக்கள் கூறியதாவது:-
கோவை மாவட்டத்தில் உள்ள இ-சேவை மையங்களில் காலை 10 மணியில் இருந்தே பொதுமக்கள் கூட்டம் அதிகமாக காணப்படுகிறது. ஆதார், ஸ்மார்ட் ரேஷன் கார்டுகளில் பெயர் நீக்கம், பெயர் சேர்ப்பு, முகவரி மாற்றம், திருத்தம் ஆகியவற்றுக்கு விண்ணப்பிக்க நீண்ட வரிசையில் காத்திருந்து, அங்கிருக்கும் ஊழியர்களிடம் கொடுத்தால், தொழில்நுட்ப கோளாறு ஏற்பட்டுள்ளதால், அதற்கு விண்ணப்பிக்க முடியாது என்று கூறுகிறார்கள்.
ஆனால் புதிய கார்டு, சான்றிதழ்களுக்கு மட்டுமே விண்ணப்பங்கள் கொடுங்கள் என்று கூறுகிறார்கள். கடந்த 10 நாட்களாக இதுபோன்றுதான் கூறி வருகிறார்கள். தொழில்நுட்ப கோளாறை சரிசெய்தால் பொது மக்களுக்கு உதவியாக இருக்கும். இல்லை என்றால் அதற்கான அறிவிப்பு பலகை வைத்தால் பொதுமக்கள் நீண்ட நேரம் காத்திருந்து ஏமாற்றத்துடன் திரும்பி செல்லும் நிலை ஏற்படாது. எனவே அதிகாரிகள் அதற்கான நடவடிக்கையை எடுக்க வேண்டும் இவ்வாறு அவர்கள் கூறினார்கள்.
இது குறித்து அதிகாரி ஒருவர் கூறிய தாவது:-
தனியார் மையங்களில் ஆதார் கார்டு, ஸ்மார்ட் ரேஷன் கார்டு உள்பட முக்கிய ஆவணங் கள் பதிவிறக்கம் செய்யப்பட்டு வந்தது. இதனால் ஒருவருக்கு தெரியாமலேயே அவருடைய ஆவணங்களை திருடுவதாக புகார் எழுந்தது. அதை தடுக்கும் வகையில், இ-சேவை மையங்களில் மட்டுமே ஆவணங்களை பதிவிறக்கம் செய்து பிரிண்ட் எடுப்பதற்கு வசதியாக புதிய சாப்ட்வேர் பொருத்தப்பட்டு வருகிறது.
இதன் காரணமாக சில நேரங்களில் தொழில்நுட்ப கோளாறு ஏற்படுவதால் திருத்தம் செய்ய முடிய வில்லை. அது இன்னும் ஒரு வாரத்துக்குள் சரியாகிவிடும். எனவே பொதுமக்கள் ஒருவாரம் கழித்து ஆதார், ஸ்மார்ட் ரேஷன் கார்டுகளில் பெயர் மாற்றம், நீக்கம், திருத்தம், முகவரி மாற்றம் போன்றவற்றுக்கு விண்ணப்பிக்கலாம். ஆனால் புதிய கார்டு, சான்றிதழ்களுக்கு எப்போதும் போல விண்ணப்பிக்கலாம் இவ்வாறு அவர்கள் கூறினார்கள்.