வாலாஜா நகரில் குப்பைகளை அகற்ற தனியார் பங்களிப்புடன் 25 குப்பை தொட்டிகள் ஒப்படைப்பு

வாலாஜா நகரில் குப்பைகள் தேக்கம் அடைவதால் சுகாதாரக்கேடு ஏற்பட்டு வந்தது. இதனை தவிர்க்க முக்கிய இடங்களில் குப்பை தொட்டிகள் வைக்க முடிவு செய்யப்பட்டது.

Update: 2018-04-18 22:22 GMT
வாலாஜா,

தனியார் பங்களிப்புடன் ரூ.20 லட்சம் மதிப்பீட்டில் 25 குப்பை தொட்டிகள் வாங்கப்பட்டுள்ளது. இதனை ஒப்படைக்கும் நிகழ்ச்சி காந்தி எம்.எல்.ஏ. தலைமையில் நடந்தது.

விழாவில் குப்பை தொட்டிகளை கலெக்டர் ராமன், காந்தி எம்.எல்.ஏ. ஆகியோர் வாலாஜா நகராட்சி பயன்பாட்டிற்காக நகராட்சிகளின் மண்டல இயக்குனர் சி.விஜயகுமாரிடம் ஒப்படைத்தனர். இதில் உதவி கலெக்டர் வேனுசேகரன், வாலாஜா நகராட்சி ஆணையாளர் அசோக்குமார், துப்புரவு அலுவலர் பழனிசாமி, தாசில்தார் விஜயகுமார் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

நிகழ்ச்சியில் கலெக்டர் ராமன் பேசுகையில், “முன்பு டெங்கு குறித்த ஆய்வுப்பணிக்கு வந்தபோது போதிய அளவு குப்பை தொட்டிகள் நகராட்சியில் இல்லை என்பதை அறிந்து சட்டமன்ற உறுப்பினர் முயற்சியால் 25 குப்பை தொட்டிகள் தனியார் பங்களிப்புடன் வாங்கப்பட்டுள்ளது. இதற்காக எம்.எல்.ஏ. மற்றும் சம்பந்தப்பட்ட தனியார் நிறுவனங்களுக்கு நன்றி தெரிவித்துக்கொள்கிறேன்.

இதேபோன்று தனியார் சமூக பங்களிப்பு நிதி திட்டத்தில் மாவட்டத்தின் பல்வேறு வளர்ச்சி பணிகளுக்கு நிதியுதவி வழங்க வேண்டும்” என்றார். 

மேலும் செய்திகள்