காஷ்மீர் சிறுமி கொலையை கண்டித்து த.மு.மு.க., மனிதநேய மக்கள் கட்சியினர் ஆர்ப்பாட்டம்
காஷ்மீர் சிறுமி கொலையை கண்டித்து ஊட்டியில் த.மு.மு.க., மனிதநேய மக்கள் கட்சியினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
ஊட்டி,
காஷ்மீரில் சிறுமி ஆஷிபாவை பாலியல் பலாத்காரம் செய்து கொடூரமாக கொலை செய்தவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்கக்கோரியும், நீதி கேட்டும் தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்ற கழகம் மற்றும் மனிதநேய மக்கள் கட்சி சார்பில் ஊட்டி ஏ.டி.சி. திடலில் நேற்று கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
ஆர்ப்பாட்டத்துக்கு மனிதநேய மக்கள் கட்சி மாவட்ட செயலாளர் அப்துல் சமது தலைமை தாங்கினார். த.மு.மு.க. தலைமை செயற்குழு உறுப்பினர் அபுதாகீர் முன்னிலை வகித்தார். ஆர்ப்பாட்டத்தில் 8 வயது சிறுமி ஆஷிபாவை கூட்டு பாலியல் பலாத்காரம் செய்தவர்கள் மீது போலீஸ் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று வலியுறுத்தப்பட்டது.
ஆர்ப்பாட்டத்தில் சிறுவர்கள் முதல் பெரியவர்கள் வரை கொலை வழக்கில் நீதி கிடைக்க வேண்டும் என்று பதாகைகளை ஏந்தி ஆர்ப்பாட்டத்தில் கலந்துகொண்டனர். த.மு.மு.க. மாநில செயற்குழு உறுப்பினர் கமலூதின் மற்றும் பெண்கள் 200-க்கும் மேற்பட்டோர் கலந்துகொண்டனர். அப்போது ஊட்டியில் மழை பெய்தது. கொட்டும் மழையிலும் ஆர்ப்பாட்டம் நடந்தது. இந்த ஆர்ப்பாட்டம் குறித்து த.மு.மு.க தலைமை செயற்குழு உறுப்பினர் அபுதாகீர் கூறியதாவது:-
சிறுமி கொலை வழக்கில் கைது செய்யப்பட்ட 4 போலீஸ் அதிகாரிகள், முன்னாள் அரசு அதிகாரி உள்பட 8 பேர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்து உள்ளனர். சிறப்பு நீதிமன்றம் அமைத்து விசாரணை நடத்தி அந்த 8 பேருக்கு தூக்கு தண்டனை வழங்க வேண்டும். அவர்களுக்கு ஆதரவாக நடந்த பேரணியில் கலந்துகொண்ட பா.ஜனதாவை சேர்ந்த 2 அமைச்சர்கள் மீதும் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
சிறுமி கொலை செய்யப்பட்டு 5 நாட்களுக்கு பின்னர் தான் உடல் கண்டெடுக்கப்பட்டது. அங்கு கோவில் ஒன்றில் பல நாட்கள் கட்டி வைக்கப்பட்டதாகவும், மயக்க மருந்து தரப்பட்டதாகவும், பல நாள் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டதாகவும் போலீசார் குற்றப்பத்திரிகையில் கூறப்பட்டு உள்ளது. எனவே, சிறுமி ஆஷிபாவை கொடூர கொலை செய்தவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.
ஆர்ப்பாட்டத்தில் நசரத் பானு பேசும்போது, இந்தியாவில் சிறுமிகளுக்கு எதிராக நடக்கும் பாலியல் வன்கொடுமை சம்பவங்களால் பெண்கள் மிகவும் பயந்து இருக்கிறார்கள். பா.ஜானதா ஆளும் உத்தரபிரதேச மாநிலத்தில் சிறுமி பலாத்காரம் செய்யப்பட்ட வழக்கில் எம்.எல்.ஏ. ஒருவர் கைது செய்யப்பட்டு உள்ளார். இதுபோன்ற சம்பவங்கள் தொடர்ந்தால் பெண்கள், சிறுமிகள் எப்படி வெளியில் நடமாட முடியும். எனவே, மத்திய அரசு சிறுமி ஆஷிபா வழக்கில் தொடர்புடையவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றார். ஆர்ப்பாட்டத்தையொட்டி போலீஸ் துணை சூப்பிரண்டு திருமேனி தலைமையில் போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டு இருந்தது.