பயணிகள் நிழற்குடை மீது பஸ் மோதல்; மாணவி உள்பட 20 பேர் படுகாயம்

மன்னார்குடி அருகே பயணிகள் நிழற்குடை மீது பஸ் மோதியதில் பள்ளி மாணவி உள்பட 20 பேர் படுகாயம் அடைந்தனர்.;

Update: 2018-04-18 23:00 GMT
சுந்தரக்கோட்டை,

தஞ்சை மாவட்டம் பட்டுக்கோட்டையில் இருந்து மன்னார்குடி நோக்கி நேற்று காலை ஒரு தனியார் பஸ் வந்து கொண்டிருந்தது.

மன்னார்குடி அருகே உள்ள கீழநாகை என்ற இடத்தில் வந்தபோது டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்த பஸ் பயணிகள் நிழற்குடை மீது மோதி விபத்திற்குள்ளானது. இதில் பஸ்சின் முன்பக்க கண்ணாடி உடைந்தது.

இந்த விபத்தில் பஸ்சில் பயணம் செய்த மன்னார்குடியை அடுத்த ஆலங்கோட்டையை சேர்ந்த காவ்யா(வயது 16), உள்ளிக்கோட்டையை சேர்ந்த ராஜிவி(16), பள்ளி மாணவி பிரியதர்சினி(13), திவ்யா(22), வடசேரியை சேர்ந்த துர்காதேவி(25), மன்னார்குடியை சேர்ந்த ராஜாத்தி(35), பட்டுக்கோட்டையை சேர்ந்த பரமேஸ்வரி(37), கண்ணுகுடியை சேர்ந்த சுதா(25) ஆகியோர் உள்பட 20 பேர் படுகாயம் அடைந்தனர்.

படுகாயம் அடைந்தவர்கள் அனைவரும் உடனடியாக 108 ஆம்புலன்ஸ் மூலம் மன்னார்குடி அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டனர். அங்கு அவர்களுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இதுகுறித்து மன்னார்குடி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். 

மேலும் செய்திகள்