மின்வாரிய பொறியாளர் அலுவலகத்தை ஒப்பந்த தொழிலாளர்கள் முற்றுகையிட்டு போராட்டம்
கிருஷ்ணகிரியில் மின்வாரிய மேற்பார்வை பொறியாளர் அலுவலகத்தை ஒப்பந்த தொழிலாளர்கள் முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர்.
கிருஷ்ணகிரி,
கிருஷ்ணகிரி அவதானப்பட்டியில் உள்ள மின்வாரிய மேற்பார்வை பொறியாளர் அலுவலகத்தை சி.ஐ.டி.யு. தமிழ்நாடு மின் ஊழியர் மத்திய அமைப்பின் சார்பில், ஒப்பந்த தொழிலாளர்கள் முற்றுகையிட்டு பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி போராட்டத்தில் ஈடுபட்டனர். இந்த போராட்டத்திற்கு மத்திய அமைப்பின் திட்ட தலைவர் சதீஷ்குமார், செயலாளர் துரை ஆகியோர் தலைமை தாங்கினர். நிர்வாகிகள் சின்னசாமி, மணிவேல், கணேசன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். மத்திய அமைப்பு திட்ட செயலாளர் கருணாநிதி, அரசு போக்குவரத்து கழக ஊழியர் சங்க தலைவர் குணசேகரன், மத்திய அமைப்பு திட்ட பொருளாளர் முனிசாமி, கோட்ட செயலாளர்கள் ராஜேந்திரன், சின்னசாமி, பெரியசாமி உள்பட பலர் கலந்துகொண்டனர். முடிவில் தங்கமலர் நன்றி கூறினார்.
கோஷங்கள்
இந்த போராட்டத்தின் போது, கிருஷ்ணகிரி மாவட்டத்தில் மின்வாரிய அலுவலகத்தின் மூலம் ஒப்பந்த அடிப்படையில் பல ஆண்டுகளாக பணிபுரிந்து வரும் தொழிலாளர்களை பணி நிரந்தரம் செய்ய வேண்டும்.
பல ஆண்டுகளாக எந்த ஊதிய உயர்வுமின்றி பணியாற்றி வரும் ஊழியர்களுக்கு தினக்கூலியாக ரூ. 380 வழங்க வேண்டும். பணியின் போது விபத்து ஏற்பட்டால், விபத்து நிவாரணம் வழங்க வேண்டும் என்பது உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை நிறைவேற்றிட வலியுறுத்தி கோஷங்கள் எழுப்பினர்.