புதுக்கோட்டையில் எச்.ராஜா உருவ பொம்மையை எரித்து தி.மு.க.வினர் ஆர்ப்பாட்டம்

புதுக்கோட்டையில் எச்.ராஜாவின் உருவபொம்மையை எரித்து தி.மு.க.வினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். இதையடுத்து போலீசார் தண்ணீர் ஊற்றி அணைத்தனர்.

Update: 2018-04-18 23:00 GMT
புதுக்கோட்டை,

பாரதீய ஜனதா கட்சி தேசிய செயலாளர் எச்.ராஜா தன்னுடைய டுவிட்டர் பக்கதில், தி.மு.க மாநிலங்களவை உறுப்பினர் கனிமொழியை விமர்சித்துள்ளார். இதனை கண்டித்து புதுக்கோட்டை புதிய பஸ் நிலையம் முன்பாக தி.மு.கவினர் நேற்று எச்.ராஜாவின் உருவபொம்மையை எரித்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது உருவப்பொம்மையில் எரிந்து கொண்டிருந்த தீயை அங்கு பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த போலீசார் தண்ணீரை ஊற்றி அணைத்தனர். ஆர்ப்பாட்டத்திற்கு வடக்கு மாவட்ட மாணவரணி அமைப்பாளர் முபாரக் தலைமை தாங்கினார். ராஜேஸ்வரி, சித்ரா ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

இதில்நகர துணை செயலாளர் மதியழகன், இளைஞரணி அமைப்பாளர் ஹரிஹரன், ராமேஷ், செல்வராஜ், கட்சி நிர்வாகிகள் மற்றும் பலர் கலந்து கொண்டனர். ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்டவர்கள் எச்.ராஜாவிற்கு எதிராக கோ‌ஷங்களை எழுப்பினர். இந்த ஆர்ப்பாட்டத்தால் அப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.

மேலும் செய்திகள்