பா.ஜ.க. கொடி கம்பத்தில் மதுபாட்டில் கட்டப்பட்டதால் பரபரப்பு
புதுக்கோட்டை அருகே பா.ஜ.க. கொடி கம்பத்தில் மதுபாட்டில் கட்டப்பட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.
அன்னவாசல்,
புதுக்கோட்டை அருகே உள்ள சத்தியமங்கலம்–மேலூர் சாலையில் பா.ஜ.க. கொடி கம்பம் ஒன்று உள்ளது. அந்த கொடி கம்பத்தில் நேற்று முன்தினம் மர்மநபர்கள் சிலர் கயிற்றில் மது பாட்டிலை கட்டி தொங்க விட்டுள்ளனர். இதைக்கண்ட பா.ஜ.க. நிர்வாகிகள் அதிர்ச்சி அடைந்தனர். பின்னர் இதுகுறித்து நடவடிக்கை எடுக்கக்கோரி பா.ஜ.க. நிர்வாகிகள் சாலைமறியலில் ஈடுபட முயன்றனர். இதுகுறித்து தகவல் அறிந்த புதுக்கோட்டை துணை போலீஸ் சூப்பிரண்டு ஆறுமுகம் தலைமையிலான போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து, சாலைமறியலில் ஈடுபட முயன்றவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர்.
பரபரப்பு
இதில் உங்களது கோரிக்கைகள் குறித்து உடனடியாக நடவடிக்கை எடுப்பதாக போலீசார் உறுதியளித்தனர். இதையடுத்து அனைவரும் அங்கிருந்து கலைந்து சென்றனர். பின்னர் போலீசார் அந்த மதுபாட்டிலை கொடி கம்பத்தில் இருந்து அகற்றினர். இந்த சம்பவம் குறித்து வெள்ளனூர் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். பா.ஜ.க. கொடி கம்பத்தில் மதுபாட்டில் கட்டப்பட்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.