திருச்சியில் எச்.ராஜாவின் உருவபொம்மையை எரித்த தி.மு.க.வினர் 80 பேர் கைது
திருச்சியில் எச்.ராஜாவின் உருவ பொம்மையை எரித்த தி.மு.க.வினர் 80 பேர் கைது செய்யப்பட்டனர்.
மலைக்கோட்டை,
தி.மு.க. தலைவர் கருணாநிதி, கனிமொழி எம்.பி ஆகியோர் குறித்து அவதூறான தகவலை எச்.ராஜா தனது டுவிட்டர் பக்கத்தில் பதிவிட்டு இருப்பதை கண்டித்து நேற்று திருச்சி சிந்தாமணி அண்ணா சிலை அருகில் மாநகர மாவட்ட தி.மு.க செயலாளர் அன்பழகன் தலைமையில் தி.மு.க.வினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். ஆர்ப்பாட்டத்தில் எச்.ராஜாவை கண்டித்து கோஷங்களை எழுப்பினார்கள்.
அனுமதி பெறாமல் நடத்தப்பட்ட ஆர்ப்பாட்டம் குறித்து தகவல் அறிந்து கோட்டை சரக போலீஸ் உதவி கமிஷனர் பெரியய்யா தலைமையில் இன்ஸ்பெக்டர் மணிகண்டன், சப்–இன்ஸ்பெக்டர்கள் சிவசுப்பிரமணியன், அம்சவள்ளி உள்ளிட்ட ஏராளமான போலீசார் குவிக்கப்பட்டனர். அப்போது யாரும் எதிர்பார்க்காத நேரத்தில் தி.மு.க.வினர் ஆளுக்கொரு திசை என 3 திசையில் இருந்து எச்.ராஜாவின் 3 உருவபொம்மைகளை எரிப்பதற்காக தூக்கி வந்தனர்.
இதையடுத்து போலீசார் முதல் 2 உருவ பொம்மைகளை போராடி பறித்து சென்றனர். ஆனால் தி.மு.க மகளிர் அணி சார்பில் எடுத்து வரப்பட்ட உருவபொம்மையை பறிப்பதற்கு முன்பாக, அந்த உருவ பொம்மையையும், உருவப்படத்தையும் செருப்பால் அடித்தும், படத்தை கிழித்தும், கீழேபோட்டு தீ வைத்து கொளுத்தினர். இதைத்தொடர்ந்து அங்கு பாதுகாப்பு பணியில் இருந்த போலீசார் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட 15 பெண்கள் உள்பட 80 பேரை கைது செய்து மதுரை ரோட்டில் உள்ள ஒரு திருமண மண்டபத்தில் தங்க வைத்தனர். இதில் முன்னாள் எம்.எல்.ஏ. அன்பில் பெரியசாமி, நிர்வாகிகள் பாலமுருகன், குமார், மகளிரணியினர் உட்பட ஏராளமானோர் கலந்து கொண்டனர். பின்னர் இரவில் கைது செய்யப்பட்ட அனைவரும் விடுதலை செய்யப்பட்டனர்.