திருச்சி–தஞ்சாவூர் இடையே இரட்டை ரெயில் பாதையில் மின்பாதை அமைக்கும் பணி அதிகாரிகள் தகவல்
திருச்சி–தஞ்சாவூர் இடையே இரட்டை ரெயில் பாதையில் மின்பாதை அமைக்கும் பணி செப்டம்பர் மாதத்திற்குள் முடிவடையும் என்று அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.;
திருச்சி,
திருச்சியில் இருந்து தஞ்சாவூர், திருவாரூர், நாகை வழியாக காரைக்கால் வரையிலான 153 கிலோ மீட்டர் தூரத்திற்கு ரெயில் வழித்தடம் மின்மயமாக்கப்படும் என கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்பு அறிவிக்கப்பட்டது. ஒரு கிலோ மீட்டர் மின் மயமாக்கலுக்கு ரூ.80 லட்சம் என ரூ.200 கோடிக்கு மேல் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டது. இந்த பணியை இந்திய ரெயில்வேயின் மின்மயமாக்கல் பிரிவு மேற்கொண்டு வருகிறது. காரைக்கால், திருவாரூர், நாகை போன்ற இடங்களில் மின்மயமாக்கலுக்கான பணிகள் நடைபெற்று வரும் நிலையில், திருச்சி–தஞ்சாவூர் இடையே இரட்டை ரெயில் பாதை அமைக்கும் பணி நடந்ததால் மின்மயமாக்கும் பணியில் தொய்வு ஏற்பட்டது.
தற்போது திருச்சி–தஞ்சாவூர் இடையே இரட்டை ரெயில் பாதை அமைக்கும் பணி முடிந்து விட்டதால், அந்த 50 கிலோ மீட்டர் தூரத்துக்கு முதலில் மின்மயமாக்கலை அமைக்க முடிவு செய்யப்பட்டு, அதற்கான பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது. இதற்காக திருச்சி–தஞ்சாவூர் இடையே உள்ள இருவழிப்பாதைகளிலும் ஒருவழி பாதைக்கு தலா 1,200 உயர் அழுத்த மின்கோபுரங்கள் என 2 ஆயிரத்து 400 உயர் அழுத்த மின்கோபுரங்கள் அமைக்கும் பணிகள் நடைபெற்று வருகிறது.
3 துணை மின்நிலையங்கள்
இதற்கான அடித்தளங்கள் அமைக்கும் பணியில் மின்மயமாக்கல் பிரிவு ஊழியர்கள் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர். இந்த பணிகள் வருகிற செப்டம்பர் மாதத்திற்குள் முடிவடையும் என அதிகாரிகள் தெரிவித்து உள்ளனர். திருச்சி–காரைக்கால் இடையே உள்ள பணிகள் முழுமையாக டிசம்பர் மாதத்திற்குள் முடிவடைந்து விடும். இதற்காக திருவாரூர், காரைக்கால், நாகை ஆகிய இடங்களில் 3 துணை மின் நிலையங்கள் அமைக்கப்பட உள்ளன.
இது குறித்து ரெயில்வே மின்மயமாக்கல் பிரிவு அதிகாரிகள் கூறிகையில், மின்மயமாக்கல் திட்டம் நிறைவேறினால், ரெயில்களில் வேகம் அதிகரித்து, பயண நேரம் குறையும். மேலும் சுற்றுச்சூழல் மாசுபடாது. டீசல் பயன்பாடு குறையும். இதனால் ரெயில்வே நிர்வாகத்திற்கு செலவும் குறையும். மின்சார ரெயில் என்ஜின்களுக்கு அதிக இழுவை திறன் இருக்கும் என்பதால், ரெயில்களில் கூடுதல் பெட்டிகளை சேர்க்கலாம். காரைக்காலில் இருந்து சரக்கு போக்குவரத்திற்கும் இந்த மின்மயமாக்கல் திட்டம் மிகவும் உதவியாக இருக்கும் என்றனர்.