ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே பஸ்-சரக்கு வேன் மோதல்; 3 பேர் பலி
ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே, அரசு விரைவு பஸ்சும் சரக்கு வேனும் நேருக்கு நேர் மோதிக் கொண்டதில் வேனில் வந்த 3 பேர் உடல் நசுங்கி உயிரிழந்தனர்.
ஸ்ரீவில்லிபுத்தூர்,
புதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கியில் இருந்து ராஜபாளையத்திலுள்ள மில்லுக்கு எந்திரம் ஏற்றிக் கொண்டு சரக்கு வேன் வந்தது. எந்திரத்தை இறக்கியபின் ஊருக்கு திரும்பிக்கொண்டு இருந்தது.
வேன், கொல்லம்-திருமங்கலம் தேசிய நெடுஞ்சாலையில் ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே, நத்தம்பட்டிக்கும் கிருஷ்ணன்கோவிலுக்கும் இடையே நேற்று காலை 8.30 மணி அளவில் வந்து கொண்டிருந்தது. அப்போது எதிரே சென்னையில் இருந்து செங்கோட்டை நோக்கி வந்த அரசு விரைவு போக்குவரத்துக் கழக பஸ்சும் வேனும் நேருக்கு நேர் பயங்கரமாக மோதிக்கொண்டன.
இதில் சம்பவ இடத்திலேயே வேனை ஓட்டி வந்த அறந்தாங்கி, கோட்டையைச் சேர்ந்த கருப்பையாவின் மகன் விக்னேஷ் (வயது 25), வேனில் வந்த புதுக்கோட்டை, பொன்னம்பட்டியை சேர்ந்த பாலாஜி (21), அறந்தாங்கி, மலையூர் பாலசுப்பிரமணியின் மகன் மகேந்திரன் ஆகியோர் உடல் நசுங்கி உயிரிழந்தனர். மேலும் வேனில் வந்த மோகன்ராஜ்(28), வெங்கடேசன்(25) ஆகியோர் படுகாயம் அடைந்தார்கள்.
தகவல் அறிந்ததும் விரைந்து வந்த தீயணைப்பு படை வீரர்கள் படுகாயம் அடைந்தோரை மதுரை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இடிபாடுகளில் சிக்கியிருந்த மூவரின் உடலை மீட்டனர். இந்த விபத்தால் சுமார் 1 மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
சிவகாசி அருகே உள்ள திருத்தங்கல் முருகன் காலனியை சேர்ந்த முருகேசன் மகன் இளையராஜா (20). சத்யா நகரை சேர்ந்த முனியசாமி மகன் மாயக்கண்ணன் ( 21). இவர்கள் இருவரும் சிவகாசி-சாத்தூர் ரோட்டில் உள்ள ஒரு கல்லூரியில் 3-ம் ஆண்டு படித்து வந்தனர். இளையராஜாவுக்கு சொந்தமான இருசக்கர வாகனத்தில் இருவரும் நேற்று காலை கல்லூரிக்கு சென்றபோது, கோணம்பட்டி விலக்கு அருகே, சாத்தூரில் இருந்து சிவகாசி நோக்கி வந்த தனியார் பஸ் மோதியது.
இதில் இளையராஜா சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தார். பின்னால் அமர்ந்து வந்த மாயக்கண்ணன் பலத்த காயத்துடன் உயிருக்கு ஆபத்தான நிலையில் சிவகாசி அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு வரப்பட்டார். ஆனால் வரும் வழியில் அவர் உயிர் இழந்தார்.
இந்தவிபத்து குறித்து சிவகாசி கிழக்கு போலீசார் வழக்கு பதிவு செய்து தனியார் பஸ் டிரைவர் மாயகிருஷ்ணன் ( 26) என்பவரை கைது செய்தனர்.