காங்கிரஸ் கட்சி இரட்டைவேடம் போடுகிறது - ரங்கசாமி குற்றச்சாட்டு
காவிரி மேலாண்மை வாரிய பிரச்சினையில் காங்கிரஸ் கட்சி இரட்டைவேடம் போடுகிறது. என்று முன்னாள் முதல்-அமைச்சர் ரங்கசாமி குற்றம்சாட்டினார்.
புதுச்சேரி,
என்.ஆர். காங்கிரஸ் கட்சி சார்பில் நடந்த உண்ணாவிரதத்தை நேற்று மாலை முடித்து வைத்து ரங்கசாமி பேசியதாவது:-
புதுச்சேரி யூனியன் பிரதேசம் என்பதால், எதையும் மத்திய அரசோடு போராடிதான் பெறவேண்டும். ஆனால், காங்கிரஸ் கட்சி முதல்வர் நாராயணசாமி, மத்திய அரசோடு மோதல் போக்கையே கடைபிடித்து வருகிறார். புதுச்சேரியை பொறுத்தவரை மத்திய அரசின் நேரடி கட்டுப்பாட்டில் உள்ளோம். கவர்னருடன் சுமூக உறவுடன்தான் காரியத்தை சாதிக்கவேண்டும்.
எதற்கெடுத்தாலும் கவர்னரை குறைக்கூறி புதுச்சேரி வளர்ச்சியை முதல்வர் நாராயணசாமி கெடுத்துவிட்டார். சென்னைக்கு பிரதமர் வந்தபோது அவரை சந்திக்க மாட்டேன் என வீம்பு செய்தார். ஆனால், தமிழக முதல்வர் பிரதமரை சந்தித்து காவிரி மேலாண்மை வாரியம் அமையவேண்டும் என மனு கொடுத்தார். நாராயணசாமியோ பிரதமர் அருகில் இருந்தும் வீம்புக்காக விட்டுவிட்டார்.
காவிரி நீரை வழங்கவேண்டிய கர்நாடகா மாநிலத்தில் காங்கிரஸ் ஆட்சிதான் நடைபெறுகிறது. புதுச்சேரியிலும் காங்கிரஸ் ஆட்சிதான் நடைபெறுகிறது. கர்நாடக அரசுக்கு புதுச்சேரி அரசு காவிரி நீர் குறித்து இதுவரை அழுத்தம் கொடுத்து பேசவில்லை. ராகுல்காந்தியும், கர்நாடக அரசிடம் இதுவரை புதுச்சேரிக்கான காவிரி நீர் குறித்து பேசவில்லை. அரசியல் லாபத்திற்காக இவர்கள் காவிரி நீரை கண்டுகொள்ளாமல் இருந்துவிட்டு, இப்போது காவிரி மேலாண்மை வாரியம் அமைக்கவேண்டும் என இரட்டைவேடம் போடுகின்றனர்.
புதுச்சேரியில் என்.ஆர் காங்கிரஸ் கட்சி போட்ட திட்டங்களைதான் காங்கிரஸ் கட்சி முதல்வர் நாராயணசாமி அரைகுறையாக நிறைவேற்றிவருகிறார். இதுவரை புதிய திட்டம் ஒன்றை கூட அவரால் போடமுடியவில்லை. மக்களுக்கான மாதாந்திர இலவச அரிசியை கூட நாராயணசாமியால் முழுமையாக போட முடியவில்லை. நான் எப்போதும் அனைத்துதரப்பு மக்களுக்காக போராடி வருபவன். இது மக்களுக்கு தெரியும்.
இவ்வாறு அவர் பேசினார்.