விருகம்பாக்கத்தில் வீடு புகுந்து திருடிய வழக்கில் பெண் உள்பட 3 பேர் கைது
விருகம்பாக்கத்தில் வீடு புகுந்து திருடிய வழக்கில் பெண் உள்பட 3 பேரை போலீசார் கைது செய்தனர்.
பூந்தமல்லி,
சென்னை விருகம்பாக்கம், சாலிகிராமம், சேது தெருவைச் சேர்ந்தவர் கந்தசாமி (வயது 73). இவர், கடந்த மாதம் நடைபயிற்சி சென்று விட்டு வீட்டுக்கு வந்தார். பின்னர் 2 செல்போன்கள் மற்றும் ரூ.5 ஆயிரத்தை அறையில் வைத்து விட்டு குளிக்க சென்று விட்டார்.
திரும்பி வந்து பார்த்தபோது பணம், செல்போன்கள் மாயமாகி இருப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தார். வீட்டில் உள்ள கண்காணிப்பு கேமராவில் பதிவான காட்சிகளை ஆராய்ந்த போது, அதில் கந்தசாமியை பின்தொடர்ந்து அவரது வீட்டுக்குள் நுழைந்த மர்மபெண், செல்போன்கள் மற்றும் பணத்தை திருடிச்சென்று இருப்பது தெரிந்தது.
இதுபற்றி விருகம்பாக்கம் போலீசார் வழக்குப்பதிவு செய்து, கண்காணிப்பு கேமராவில் பதிவான காட்சிகளை வைத்து அந்த பெண்ணை தேடி வந்தனர்.
இந்த நிலையில் விருகம்பாக்கம் நடேசன் நகர் பூங்கா அருகே போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டு இருந்தனர். அப்போது அந்த வழியாக பையுடன் நடந்து சென்ற ஒரு பெண்ணை சந்தேகத்தின் பேரில் பிடித்து விசாரித்தனர்.
முதலில் முன்னுக்குப்பின் முரணாக பதில் கூறிய அவர், போலீசாரின் தொடர் விசாரணைக்கு பிறகு அவர்தான் கந்தசாமி வீட்டுக்குள் புகுந்து செல்போன்கள், பணத்தை திருடியது தெரிந்தது. மேலும் கண்காணிப்பு கேமராவில் பதிவான பெண் அவர்தான் என்பதும் உறுதியானது.
பின்னர் அவரை போலீஸ் நிலையம் அழைத்து சென்று விசாரித்தனர். அதில் அவர், வேலூர் மாவட்டம் தரக்காடு கிராமம் பேரணாம்பட்டை சேர்ந்த ஷபானா (வயது 36) என்பதும், சென்னை சாலிகிராமம், விருகம்பாக்கம் உள்ளிட்ட பகுதிகளில் வீடு புகுந்து திருடியதும் தெரியவந்தது.
அவரை கைது செய்த போலீசார், அவரிடம் இருந்து ரூ.20 ஆயிரம், 2 செல்போன்கள் மற்றும் 1 மடிக்கணினி ஆகியவற்றை பறிமுதல் செய்தனர்.
மேலும் ஷபானா, தான் வீடுகளில் திருடும் செல்போன், மடிக்கணினிகளை பர்மா பஜாரை சேர்ந்த அப்துல் ரசாக் மற்றும் விஜயகுமார் ஆகியோரிடம் விற்பனை செய்ததாக தெரிவித்தார். இதையடுத்து அப்துல்ரசாக், விஜயகுமார் ஆகிய 2 பேரையும் போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர்.