சூனாம்பேடு அருகே அ.தி.மு.க. பிரமுகர் உள்பட 2 பேரை கோடரியால் வெட்டிய வழக்கில் ஒருவர் கைது

சூனாம்பேடு அருகே அ.தி.மு.க. பிரமுகர் உள்பட 2 பேரை கோடரியால் வெட்டிய வழக்கில் ஒருவர் கைது செய்யப்பட்டார். கைதானவரின் மனைவி போலீஸ்நிலையம் எதிரே தீக்குளிக்க முயன்றார்.

Update: 2018-04-18 21:45 GMT
மதுராந்தகம்,

காஞ்சீபுரம் மாவட்டம் சூனாம்பேடு அடுத்த சூரைகுப்பத்தை சேர்ந்தவர் பிரம்மநாயகம். இவரது மகன்கள் செல்வகணபதி (வயது 39 ) ரஜினிகாந்த் (37). அ.தி.மு.க. பிரமுகர். இருவரும் சூரை குப்பத்தில் நின்று பேசிக்கொண்டிருந்த போது சூனாம்பேடு காலனி பகுதியை சேர்ந்த எலி என்ற செந்தமிழன், போத் என்ற காத்தவராயன்(25) உள்ளிட்ட 6 பேர் கடந்த 6-ந் தேதி இருவரையும் தகாத வார்த்தைகளால் திட்டி கோடரியால் வெட்டி விட்டு தப்பிச் சென்றனர். இதில் இருவரும் படுகாயம் அடைந்து மதுராந்தகம் அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வந்தனர்.

இது குறித்து ரஜினிகாந்த் சூனாம்பேடு போலீசில் புகார் செய்தார்.

போலீசார் நேற்று காத்தவராயனை கைது செய்து போலீஸ்நிலையத்திற்கு அழைத்து சென்று விசாரித்தனர். அப்போது போலீஸ் நிலையம் எதிரே காத்தவராயனின் மனைவி தேவபிரியா (24) தனது கைக்குழந்தையுடன் மண்எண்ணெய் ஊற்றி தற்கொலை செய்வதாக மிரட்டல் விடுத்தார்.

இதனையடுத்து போலீசார் தேவபிரியா மீது போலீசாரை தகாத வார்த்தைகளால் திட்டியதாகவும் தற்கொலை முயற்சி செய்ததாகவும் அவர் மீது வழக்குப்பதிவு செய்தனர். 

மேலும் செய்திகள்