நாமக்கல்லில் பட்டதாரி பெண் கற்பழிப்பு; நிதிநிறுவன மேலாளர் கைது
நாமக்கல்லில் பட்டதாரி பெண் கற்பழிக்கப்பட்டது தொடர்பாக நிதி நிறுவன மேலாளர் கைது செய்யப்பட்டார்.
நாமக்கல்,
நாமக்கல் சந்தைபேட்டை புதூரை சேர்ந்தவர் செல்வராஜ். இவரது மகன் தமிழ்செல்வன் (வயது28). இவர் நாமக்கல்லில் உள்ள தனியார் நிதி நிறுவனம் ஒன்றில் மேலாளராக வேலை பார்த்து வருகிறார்.
இந்த நிலையில் தமிழ்செல்வன், சேந்தமங்கலம் அருகே உள்ள அக்கியம்பட்டியை சேர்ந்த 22 வயது நிரம்பிய பட்டதாரி பெண் ஒருவரை காதலித்து வந்ததாகவும், இருவரும் அடிக்கடி உல்லாசமாக இருந்து வந்ததாகவும் கூறப்படுகிறது. எனவே அந்த பெண் தன்னை திருமணம் செய்யுமாறு வலியுறுத்தி உள்ளார். ஆனால் 3 ஆண்டுகளுக்கு திருமணம் செய்ய மாட்டேன் என தமிழ்செல்வன் கூறி உள்ளார்.
கைது
இதனால் ஆத்திரம் அடைந்த அந்த பெண் நேற்று தமிழ்செல்வனின் வீட்டிற்கு வந்து திருமணம் செய்ய வலியுறுத்தி தர்ணாவில் ஈடுபட்டார். இதையடுத்து அங்கு விரைந்து சென்ற நாமக்கல் மகளிர் போலீசார், அவரை சமரசம் செய்தனர். பின்னர் அவர் கொடுத்த புகாரின் பேரில், கற்பழிப்பு உள்ளிட்ட பிரிவுகளில் போலீசார் வழக்குப்பதிவு செய்து தமிழ்செல்வனை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இவர்கள் இருவரும் வெவ்வேறு சாதியை சேர்ந்தவர்கள் என்பதால் பெற்றோரும் எதிர்ப்பு தெரிவித்ததாக கூறப்படுகிறது.