ஜனநாயக மக்கள் உரிமை கழகத்தினர் மவுன ஊர்வலம்

காவிரி மேலாண்மை வாரியம் அமைக்காத மத்திய அரசை கண்டித்து ஜனநாயக மக்கள் உரிமை கழகத்தினர் மவுன ஊர்வலம் சென்றனர்.

Update: 2018-04-18 22:30 GMT
அம்மாபேட்டை, 

காவிரி மேலாண்மை வாரியம் அமைக்காத மத்திய அரசை கண்டித்தும், உடனடியாக காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க மத்திய, மாநில அரசுகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதை வலியுறுத்தியும் அம்மாபேட்டை அருகே சிங்கம்பேட்டை அலங்காரியூரில் ஜனநாயக மக்கள் உரிமை கழகம் சார்பில் நேற்று மவுன ஊர்வலம் நடைபெற்றது.

ஊர்வலத்துக்கு ஜனநாயக மக்கள் உரிமை கழக கிளை செயலாளர் சுரேஷ் தலைமை தாங்கினார். வடக்கு மாவட்ட செயலாளர் எஸ்.சரவணன் முன்னிலை வகித்தார்.

சிறப்பு விருந்தினராக வடக்கு மாவட்ட தலைவர் கேசவன் கலந்துகொண்டு மவுன ஊர்வலத்தை தொடங்கி வைத்தார். ஊர்வலம் அலங்காரியூரில் இருந்து தொடங்கி சென்டாபுதூர் வழியாக சிங்கம்பேட்டை அரசு மேல்நிலைப் பள்ளி வரை சென்றது. ஊர்வலத்தில் சென்றவர்கள், மத்திய அரசை கண்டிக்கும் வகையில் பதாகைகளை கையில் ஏந்தியவாறு சென்றனர்.

இதில், துணை செயலாளர் பிரகாஷ், துணை தலைவர் பெருமாள் உள்பட திரளானோர் கலந்து கொண்டனர். ஊர்வலத்தையொட்டி அம்மாபேட்டை போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.

மேலும் செய்திகள்