கடலூரில் மோட்டார் சைக்கிள் மீது பஸ் மோதல்

கடலூரில் மோட்டார் சைக்கிள் மீது பஸ் மோதிய விபத்தில் வாலிபர் பரிதாபமாக உயிரிழந்தார்.;

Update: 2018-04-18 22:15 GMT
கடலூர், 

புதுச்சேரி வில்லியனூரை சேர்ந்தவர் மதுரை மகன் பிரதீப்(வயது 35). இவர் தனியார் டி.வி. கம்பெனியில் டெக்னீசியன் ஆக வேலை பார்த்து வந்தார். நேற்று இவர் தனது மோட்டார் சைக்கிளில் கடலூருக்கு வந்தார். கடலூர் மஞ்சக்குப்பம் மணிக்கூண்டு அருகே வந்த போது, அந்த வழியாக வந்த தனியார் பஸ் அவர் மீது மோதியது. இதில் மோட்டார் சைக்கிளோடு கீழே விழுந்த பிரதீப், பஸ்சின் சக்கரத்தில் சிக்கிக்கொண்டார். படுகாயம் அடைந்த அவர் சம்பவ இடத்திலேயே துடி, துடித்து பரிதாபமாக உயிரிழந்தார்.

இதுகுறித்த தகவல் அறிந்த கடலூர் புதுநகர் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து விபத்து குறித்து விசாரணை நடத்தினர். பின்னர் அவரது உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக கடலூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். விபத்து குறித்து கடலூர் புதுநகர் போலீஸ் இன்ஸ்பெக்டர் சரவணன் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார். பலியான பிரதீப்புக்கு கண்மணி(26) என்ற மனைவியும் 2 பெண் குழந்தைகளும் உள்ளனர்.

மேலும் செய்திகள்