நாகர்கோவிலில் ஆக்கிரமிப்புகள் அகற்றம் நகராட்சி அதிகாரிகள் நடவடிக்கை
நாகர்கோவிலில் சாலைகளில் ஆக்கிரமிக்கப்பட்ட பகுதிகளை நகராட்சி அதிகாரிகள் அகற்றினர்.
நாகர்கோவில்,
நாகர்கோவில் நகரில் பல்வேறு கடைகள் நகராட்சி சாலைகளை ஆக்கிரமித்து கட்டப்பட்டு இருக்கின்றன. இதுபோல் நடைபாதையிலும் ஆக்கிரமித்து கடைகள் அமைக்கப்பட்டு இருப்பதால் பொதுமக்கள் அவதிப்பட்டு வருகிறார்கள். எனவே இந்த ஆக்கிரமிப்புகளை அகற்றும்படி நகராட்சி ஆணையர் சரவணகுமார் உத்தரவிட்டார்.
அதன்படி நகர அமைப்பு அதிகாரி விமலா தலைமையில், ஆய்வாளர்கள் கெவின்ஜாய், சந்தோஷ், துர்கா தேவி மற்றும் மகேஷ்வரி உள்ளிட்ட அதிகாரிகள் நேற்று நாகர்கோவிலில் பல்வேறு இடங்களுக்கு நேரில் சென்று ஆய்வு செய்தனர்.
நாகராஜா கோவில் ரதவீதிகள், வடிவீஸ்வரம் ரதவீதிகள் மற்றும் ஆலமூடு சந்திப்பு, செம்மாங்குடி ரோடு உள்ளிட்ட இடங்களில் இந்த ஆய்வு பணி நடந்தது.
அப்போது செம்மாங்குடி ரோட்டில் நடைபாதையை ஆக்கிரமித்து ஒரு துணிக்கடை கட்டப்பட்டு இருந்தது. இதைப் பார்த்த அதிகாரிகள் உடனே அந்த கடையின் ஆக்கிரமிப்பு பகுதியை இடித்து அகற்றும்படி கூறினர். அதைத் தொடர்ந்து ஜே.சி.பி. எந்திரம் வரவழைக்கப்பட்டு ஆக்கிரமிப்பு பகுதி இடித்து அகற்றப்பட்டது.
மேலும், சில கடைகளின் விளம்பர பலகைகள் ரோட்டில் வைக்கப்பட்டு இருந் தன. அவற்றை அதிகாரிகள் அப்புறப்படுத்தினர். இதே போல் நாகராஜா கோவில் ரதவீதிகளில் சாலையை மறைத்து அமைக்கப்பட்டு இருந்த கடைகளின் மேற்கூரையும் ஜே.சி.பி. எந்திரம் மூலமாக இடித்து அகற்றப்பட்டது. அந்த வகையில் நேற்று ஒரே நாளில் 12 கடைகளின் முன் இருந்த ஆக்கிரமிப்புகள் அகற்றப்பட்டன.
ஆக்கிரமிப்பு அகற்றம் நடவடிக்கை நாகர்கோவிலில் பரபரப்பை ஏற்படுத்தியது. இதனால் போலீஸ் பாதுகாப்புடன் பணிகள் நடைபெற்றது.