உடுமலை அருகே வேகமாக குறைந்து வரும் அமராவதி அணையின் நீர்மட்டம்
உடுமலை அருகே அமராவதி அணையில் நீர் மட்டம் வேகமாக குறைந்து வருவதால் குடிநீர் தட்டுப்பாடு ஏற்படும் அபாயம் ஏற்பட்டுள்ளது.
தளி,
உடுமலையை அடுத்த மேற்கு தொடர்ச்சிமலை அடிவாரத்தில் அமராவதி அணை உள்ளது. இந்த அணையின் மொத்த உயரம் 90 அடி ஆகும். இந்த அணைக்கு மேற்கு தொடர்ச்சி மலைகளில் உள்ள ஆறுகள் மற்றும் ஓடைகள் மூலமாக மழை காலங்களில் நீர்வரத்து ஏற்படுகின்றது. அதனை அடிப்படையாக கொண்டு திருப்பூர் மற்றும் கரூர் மாவட்டங்களில் சுமார் 55 ஆயிரம் ஏக்கர் நிலங்கள் பாசன வசதி பெற்று வருகின்றன.
அதன்படி பழைய ஆயக்கட்டு பாசனத்திற்கு அமராவதி ஆற்றிலும், புதிய ஆயக்கட்டு பாசனத்திற்கு பிரதான கால்வாய் மூலமாகவும் அணையில் இருந்து தண்ணீர் திறந்து விடப்பட்டு வரப்படுகிறது. மேலும் சுற்றுப்புற கிராம மக்கள் பயன்பெறும் வகையில் குடிநீர் திட்டங்களும் செயல்படுத்தப்பட்டு வரப்படுகிறது.
இந்த நிலையில் பருவநிலை மாற்றங்கள் காரணமாக கடந்த சில வருடங்களாக மழைப் பொழிவு படிப்படியாக குறைந்து வருகிறது. இதன் காரணமாக மேற்கு தொடர்ச்சி மலைகளில் உள்ள காட்டாறுகளில் போதிய அளவு நீர்வரத்து ஏற்படுவதில்லை. இதனால் ஆறுகள் விரைவில் வறட்சியின் பிடியில் சிக்கிக்கொள்வது வாடிக்கையாக உள்ளது.
மேலும் போதிய அளவு மழை பெய்யாதலால் கடந்த சில வாரங்களாக மேற்கு தொடர்ச்சி மலைகளில் வெப்பத்தின் தாக்கம் அதிகரித்துள்ளது. இதனால் வனப்பகுதியில் உள்ள புற்கள் மற்றும் தாவரங்கள் காய்ந்து விட்டது. மேலும் வனப்பகுதியில் கட்டப்பட்டுள்ள தடுப்பணைகள் தண்ணீர் இல்லாமல் வறண்டு விட்டன. இதன் காரணமாக வனவிலங்குகள் போதிய அளவு உணவு மற்றும் தண்ணீர் கிடைக்காமல் தவித்து வருகின்றன.
அத்துடன் வறட்சியின் காரணமாக சிற்றாறுகள் மற்றும் துணை ஆறுகள் மூலமாக அணைக்கு வந்து கொண்டிருந்த நீர்வரத்தும் குறைந்து விட்டது. இதனால் அணையின் நீர்மட்டம் வேகமாக குறைந்து வருகிறது. மேலும் அமராவதி அணையை குடிநீர் ஆதாரமாக கொண்டுள்ள கிராமங்களில் குடிநீர் தட்டுப்பாடு ஏற்படும் அபாயம் உள்ளது.
இதனால் குறைவான அளவு நீர் இருப்பை கொண்டு கோடைகாலம் முழுவதும் சுற்றுப்புற கிராமங்களுக்கு குடிநீர் வினியோகம் செய்வதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது. இதனால் பொதுமக்கள் கவலை அடைந்துள்ளனர். நேற்றைய நிலவரப்படி அணையில் 31.66 அடி தண்ணீர் உள்ளது. அணைக்கு வினாடிக்கு 16 கனஅடி தண்ணீர் வந்து கொண்டுள்ளது.