திருமணம் செய்ய மறுத்த பிளஸ்-2 மாணவியை கொன்ற தொழிலாளிக்கு ஆயுள் தண்டனை; சேலம் கோர்ட்டு தீர்ப்பு
திருமணம் செய்து கொள்ள மறுத்த பிளஸ்-2 மாணவியை கொன்ற வழக்கில் தொழிலாளிக்கு ஆயுள் தண்டனை விதித்து சேலம் கோர்ட்டு தீர்ப்பு அளித்தது.
சேலம்,
சேலம் அருகே உள்ள வீரபாண்டி காலனியை சேர்ந்தவர் ரவி. இவருடைய மகள் தாரணி (வயது 17). இவர் வீரபாண்டி பகுதியில் உள்ள அரசு மேல்நிலைப்பள்ளியில் பிளஸ்-2 படித்து வந்தார். இவரை அதே பகுதியை சேர்ந்த தொழிலாளியான லோகநாதன் (26) என்பவர் ஒருதலைபட்சமாக காதலித்து வந்தார்.
மேலும் லோகநாதன், அந்த மாணவியின் வீட்டுக்கு சென்று ரவியிடம், உங்கள் மகளை தனக்கு திருமணம் செய்து தருமாறு கூறி பெண் கேட்டார். இதற்கு அவருடைய பெற்றோர் தங்கள் மகளை கல்லூரியில் படிக்க வைப்பதாக கூறி அவருக்கு திருமணம் செய்து கொடுக்க மறுத்துவிட்டனர். இருப்பினும் லோகநாதன் அந்த மாணவியின் பின்னாலே சுற்றி வந்துள்ளார்.
கடந்த 2015-ம் ஆண்டு ஜூன் மாதம் 8-ந் தேதி மாணவி தாரணி பள்ளி முடிந்து மாலையில் வீட்டுக்கு சென்று கொண்டிருந்தார். பிள்ளையார் கோவில் அருகே சென்று போது அவரை லோகநாதன் மறித்தார். பின்னர் அவர் தன்னை திருமணம் செய்து கொள்ளுமாறு மாணவியிடம் வற்புறுத்தினார். இதற்கு அவர் மறுப்பு தெரிவித்தார். இதனால் ஆத்திரமடைந்த லோகநாதன் கத்தியால் தாரணியை குத்தி கொலை செய்தார்.
இதுதொடர்பாக ஆட்டையாம்பட்டி போலீசார் வழக்குப்பதிவு செய்து லோகநாதனை கைது செய்தனர். இதுதொடர்பான வழக்கு விசாரணை சேலம் 2-வது கூடுதல் அமர்வு கோர்ட்டில் நடந்து வந்தது. இந்த வழக்கு விசாரணை முடிந்ததால், நேற்று தீர்ப்பு கூறப்பட்டது. இதில் குற்றம்சாட்டப்பட்ட லோகநாதனுக்கு ஆயுள் தண்டனை விதித்து நீதிபதி ஸ்ரீதரன் தீர்ப்பு கூறினார்.