தீரன் சின்னமலை பிறந்தநாள் விழா உருவப்படத்துக்கு அரசியல் கட்சியினர் மரியாதை

தீரன் சின்னமலை பிறந்தநாள் விழாவையொட்டி அவருடைய உருவப்படத்துக்கு அரசியல் கட்சியினர் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.;

Update:2018-04-18 04:15 IST
அறச்சலூர், 

தீரன் சின்னமலை பிறந்தநாளையொட்டி அறச்சலூர் அருகே ஓடாநிலையில் உள்ள தீரன் சின்னமலை மணி மண்டபத்தில் அவருடைய சிலைக்கு ஈரோடு தெற்கு மாவட்ட தி.மு.க. சார்பில் மாலை அணிவிக்கும் நிகழ்ச்சி நடந்தது. நிகழ்ச்சிக்கு மொடக்குறிச்சி ஒன்றிய செயலாளர் குணசேகரன் தலைமை தாங்கினார். நெசவாளர் அணி மாநில செயலாளர் சச்சிதானந்தம் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். இதில் மாநகர செயலாளர் சுப்பிரமணியம், முன்னாள் ஒன்றிய செயலாளர் சண்முகம், முன்னாள் பொதுக்குழு உறுப்பினர் கதிர்வேல், மாவட்ட இளைஞர் அணி துணை அமைப்பாளர் தனசேகர், பேரூர் செயலாளர்கள் சண்முகசுந்தரம், விஜயகுமார், சரவணன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

காங்கிரஸ் கட்சி சார்பில் முன்னாள் எம்.எல்.ஏ. ஆர்.எம்.பழனிசாமி தலைமை தாங்கி தீரன் சின்னமலை உருவப்படத்துக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.

இதில் கட்சியின் மாநில பொதுக்குழு உறுப்பினர் பாலசுப்பிரமணியன், இளைஞர் காங்கிரஸ் தலைவர் பிரபு, பொதுச்செயலாளர் வேம்பரசன், மாவட்ட பொதுச்செயலாளர் சீதாபதி, பேபி ராமசாமி உள்பட பலர் கலந்து கொண்டனர்.

கொ.ம.தே.க. சார்பில் அந்த கட்சியின் மாநில தலைமை நிலைய செயலாளர் சூர்யமூர்த்தி தலைமையில் கட்சியினர் தீரன் சின்னமலை சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.

கொங்கு வேளாளர் கவுண்டர்கள் மக்கள் பேரவை சார்பில் அதன் மாநில தலைவர் ஏ.கருப்புசாமி, தலைமை தாங்கி தீரன் சின்னமலை சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். இதில் பேரவை மாநில பொதுச்செயலாளர் ஆறுமுகம், ஜெயமூர்த்தி, வடக்கு மாவட்ட செயலாளர் பொன் புஷ்பராஜ் உள்பட திருப்பூர், கோவை, உடுமலைபேட்டையை சேர்ந்த நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.

இதேபோல் சிவகிரி காந்தி சதுக்கத்தில் சுதந்திர போராட்ட தியாகி தீரன் சின்னமலையின் 263-வது பிறந்தநாள் விழா கொண்டாடப்பட்டது. விழாவுக்கு கொங்குநாடு மக்கள் தேசிய கட்சி மாநில இளைஞரணி செயலாளர் எஸ்.சூரியமூர்த்தி தலைமை தாங்கி, தீரன் சின்னமலை சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். பொருளாளர் பழனிச்சாமி முன்னிலை வகித்தார். ஒன்றிய தலைவர் சண்முகம் வரவேற்று பேசினார். விழாவில் இளைஞர் அணி நிர்வாகிகள் யுவராஜ், முத்துகுமார், பிரகாஷ் உள்பட பலர் கலந்துகொண்டனர். முடிவில் தலைமை பேச்சாளர் தண்டபாணி நன்றி கூறினார்.

மேலும் செய்திகள்