மைனர் பெண் கடத்தி கற்பழிப்பு 2 மனைவிக்காரருக்கு 10 ஆண்டுகள் சிறைத்தண்டனை

மைனர் பெண் கடத்தி கற்பழிப்பு வழக்கில் 2 மனைவிக்காரருக்கு 10 ஆண்டுகள் சிறைத்தண்டனை கிடைத்தது.;

Update: 2018-04-17 21:45 GMT
பெங்களூரு,

பெங்களூருவில், மைனர் பெண்ணை கடத்தி கற்பழித்த வழக்கில் 2 மனைவிக்காரருக்கு 10 ஆண்டுகள் சிறைத்தண்டனை விதித்து கோர்ட்டு உத்தரவிட்டது.

ராமநகர் மாவட்டம் கனகபுராவில் உள்ள கரடிகுட்டா பகுதியை சேர்ந்தவர் ஆனந்த்(வயது 28). இவருக்கு 2 மனைவிகள் உள்ளனர். முதல் மனைவிக்கு 2 குழந்தைகள் உள்ளனர். 2-வது மனைவிக்கு ஒரு குழந்தை இருக்கிறது. இந்த நிலையில், பெங்களூரு ஜே.பி.நகர் 6-வது ஸ்டேஜில் வசித்து வரும் மைனர் பெண் ஒருவரை, ஆனந்த் கடத்தி கனகபுராவில் உள்ள தனியார் தங்கும் விடுதியில் வைத்து கற்பழித்ததாக கூறப்படுகிறது.

மேலும், சம்பவம் குறித்து வெளியில் கூறினால் கொலை செய்து விடுவதாகவும் அவர் அந்த மைனர் பெண்ணுக்கு மிரட்டல் விடுத்து உள்ளார். இந்த சம்பவம் கடந்த ஆண்டு மார்ச் மாதம் 10-ந் தேதி நடந்தது. இதுகுறித்து புட்டேனஹள்ளி போலீசில் புகார் செய்யப்பட்டது. போலீசார் வழக்குப்பதிவு செய்து ஆனந்தை கைது செய்து சிறையில் அடைத்தனர்.

இதுதொடர்பான வழக்கு பெங்களூரு 54-வது சிட்டி சிவில் மற்றும் செசன்சு கோர்ட்டில் நடைபெற்று வந்தது. வழக்கை நீதிபதி லதா குமாரி விசாரித்தார். சாட்சி மற்றும் ஆதாரங்கள் அடிப்படையில் ஆனந்தை குற்றவாளியாக, நீதிபதி லதா குமாரி அறிவித்தார். மேலும், அவருக்கு 10 ஆண்டுகள் சிறை தண்டனையும் ரூ.50 ஆயிரம் அபராதமும் விதித்து நீதிபதி உத்தரவிட்டார்.

மேலும் செய்திகள்