கொடைக்கானலில் ஒரு வழிப்பாதை 21-ந்தேதி முதல் அமல்

கொடைக்கானலில் குளு, குளு சீசன் தொடங்கி யுள்ளதை தொடர்ந்து சுற்றுலா பயணிகளின் வருகை அதிகரித்துள்ளது. இதையொட்டி வருகிற 21-ந்தேதி முதல் ஒரு வழிப்பாதை அமலுக்கு வருகிறது.

Update: 2018-04-17 22:30 GMT
கொடைக்கானல்,

கொடைக்கானல் பகுதியில் குளு, குளு சீசன் தொடங்கி யுள்ளது. இதையொட்டி சுற்றுலா பயணிகளின் வருகை அதிகரித்துள்ளது. இதை யடுத்து போக்குவரத்து விதி முறைகளை அமல்படுத்துவது மற்றும் போக்குவரத்தை ஒழுங்குப்படுத்துவது தொடர் பான ஆலோசனை கூட்டம் சி.பா.ஆதித்தனார் திருமண மண்டபத்தில் நடந்தது. இதற்கு போலீஸ் துணை சூப்பிரண்டு பொன்னுச்சாமி தலைமை தாங்கி பேசினார்.

இதில், இன்ஸ்பெக்டர் ஜெய ராணி, சப்-இன்ஸ்பெக்டர்கள் முருகன், பொன்.குணசேகரன், ரோட்டரி சங்க தலைவர் ரோகன் சாம்பாபு, நிர்வாகி சாந்தசதீஸ், சுற்றுலா வாகன ஓட்டுனர்கள், உரிமையாளர் கள் சங்கத்தினர், சுற்றுலா வழிகாட்டிகள், தண்ணீர் லாரி உரிமையாளர்கள் மற்றும் தன்னார்வ தொண்டு நிறு வனத்தினர் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

கூட்டத்தில், வருகிற 21-ந் தேதி முதல் அனைத்து சாலை களும் ஒரு வழிப்பாதையாக மாற்றப்பட உள்ளதாகவும், வாகனங்களுக்கு ஒதுக்கீடு செய்யப்பட்ட இடத்தில் மட்டுமே நிறுத்த வேண்டும், பல்வேறு இடங்களில் கண் காணிப்பு கேமராக்கள் பொருத்துவது, போலீசாருடன் இணைந்து தன்னார்வ தொண்டு நிறுவனத்தினரை போக்குவரத்தை சீரமைக்க அனுமதிப்பது உள்பட பல்வேறு பிரச்சினைகள் குறித்து விவாதிக்கப்பட்டது.

அதனை தொடர்ந்து போலீஸ் துணை சூப்பிரண்டு பொன்னுச்சாமி நிருபர் களிடம் கூறியதாவது:-

கொடைக்கானல் பகுதியில் சீசன் தொடங்கியுள்ள நிலை யில் இந்த ஆண்டு அதிகப் படியான சுற்றுலா பயணிகள் வருகை புரிவார்கள் என எதிர்பார்க்கப்படுகின்றது. இதனை கருத்தில் கொண்டு வருகிற 21-ந்தேதி முதல் பாதுகாப்பு பணியில் கூடுதல் போலீசார் ஈடுபட உள்ளனர். அத்துடன் அன்று முதல் அனைத்து சாலைகளும் ஒரு வழிப்பாதையாக மாற்றப்பட உள்ளது.

இதன்படி தரைப்பகுதியில் இருந்து சுற்றுலா இடங்களுக்கு செல்லும் வாகனங்கள் ஏரிச்சாலை, அப்சர்வேட்டரி வழியாக சென்று சுற்றுலா இடங்களை பார்த்து விட்டு கோக்கர்ஸ்வால்க் வழியாக நகர் பகுதிக்குள் வர வேண்டும். அதேபோல ஏரிச்சாலைக்குள் வரும் வாகனங்கள் கலை யரங்கம் வழியாக வந்து பிரையண்ட் பூங்கா, நகராட்சி அலுவலகம் வழியாக வெளியேற வேண்டும், மூஞ்சிக்கல் மற்றும் வனத்துறை அலுவலக சாலைகள் ஒரு வழி பாதையாக மாற்றப்படும்.

வனப்பகுதியில் உள்ள சுற்றுலா இடங்களுக்கு செல்லும் சாலையினை காலை 7.30 மணிக்கு திறந்து மாலை 5 மணிக்கு மூடுவதற்கு வனத்துறையினரிடம் பேசி முடிவு செய்யப்படும். வெளியூர்களில் இருந்து வரும் கனரக வாகனங்களை பழைய அப்பர் லேக் சாலையில் நிறுத்தவேண்டும். அதேபோல ஆம்னி பஸ்கள் லாய்ட்ஸ் ரோடு பகுதியில் நிறுத்த வேண்டும்.

நகரின் பல்வேறு இடங்களில் பழுதான கண்காணிப்பு கேமராக்கள் சீரமைக்கப் படுவதுடன், ஏரிச்சாலையில் 20-க்கும் மேற்பட்ட இடங் களில் கேமராக்கள் புதிதாக பொருத்தப்பட்டு கண் காணிக்கப்படும். அத்துடன் மலைச்சாலையில் நடமாடும் வாகனங்கள் மூலம் பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்படும். தேவைப்படும் இடங்களில் சாலையின் நடுவில் தடுப்புகள் அமைக்கப்படும்.

இவ்வாறு அவர் கூறினார்.

மேலும் செய்திகள்