விமான நிலையத்தில் ரூ.35 லட்சம் கடத்தல் தங்கத்துடன் தம்பதி கைது

மும்பை சர்வதேச விமான நிலையத்தில் துபாயில் இருந்து வந்த விமானம் தரைஇறங்கியது.

Update: 2018-04-17 21:26 GMT
மும்பை,

விமானத்தில் தங்கம் கடத்தி வரப்படுவதாக சுங்கத்துறை அதிகாரிகளுக்கு தகவல் கிடைத்தது. இதையடுத்து சுங்கத்துறை அதிகாரிகள் அந்த விமானத்தில் வந்திறங்கிய பயணிகளிடம் சோதனை நடத்தினார்கள்.

இந்த சோதனையின் போது, சித்திக் என்ற பயணி மற்றும் அவரது மனைவி ஜாம்சியா ஆகியோரது நடவடிக்கையில் சந்தேகம் அடைந்த அதிகாரிகள் இருவரையும் தனியறைக்கு அழைத்துச்சென்று சோதனையிட்டனர். அப்போது கணவர், மனைவி இருவரும் தங்களது இடுப்பு பகுதியில் மறைத்து வைத்திருந்த தங்கக்கட்டிகளை அதிகாரிகள் கண்டுபிடித்து பறிமுதல் செய்தனர். அவற்றின் மதிப்பு ரூ.35 லட்சம் ஆகும்.

இதையடுத்து இருவரும் சகார் போலீசில் ஒப்படைக்கப்பட்டனர். போலீசார் 2 பேரையும் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். 

மேலும் செய்திகள்