சமயபுரம் மாரியம்மன் கோவில் சித்திரை திருவிழா தேரோட்டம்
சமயபுரம் மாரியம்மன் கோவில் சித்திரை திருவிழா தேரோட்டம் விமரிசையாக நடந்தது. “ஓம் சக்தி, பராசக்தி” என்ற பக்தி முழக்கத்துடன் திரளான பக்தர்கள் தேரினை வடம் பிடித்து இழுத்தனர்.
சமயபுரம்,
தமிழகத்திலுள்ள பிரசித்தி பெற்ற சக்தி தலங்களில் முதன்மையானது திருச்சி அருகே உள்ள சமயபுரம் மாரியம்மன் கோவில் ஆகும். வேறு எந்த கோவிலிலும் இல்லாத வகையில், இங்கு அஷ்ட புஜங்களுடன் கூடிய சுயம்பு திருமேனியாக பதம் மாறி, சிவபதத்தில் விக்ரம சிம்மாசனத்தில் எழுந்தருளி சாந்தமான முகத்தோடு அம்மன் பக்தர்களுக்கு அருள்பாலித்து வருகிறார்.
உலக நன்மைக்காகவும், தன்னை தரிசிக்க வரும் பக்தர்களுக்கு எந்தவிதமான நோய்களும்-தீவினைகளும் அணுகாமல், சகல பாக்கியங்களும் கிடைக்க அம்மனே ஆண்டுதோறும் மாசி மாதம் கடைசி ஞாயிறு முதல் பங்குனி கடைசி ஞாயிறு வரை 28 நாட்கள் பச்சை பட்டினி விரதம் இருப்பது இந்த கோவிலின் தனிச்சிறப்பாகும்.
இக்கோவிலில் பஞ்சப்பிரகார விழா, பூச்சொரிதல் விழா, தெப்பத்திருவிழா உள்பட பல்வேறு விழாக்கள் நடைபெறுகின்றன. இவை எல்லாவற்றிலும் சிறப்பானது ஆண்டுதோறும் நடைபெறும் சித்திரை திருவிழாவாகும். இந்த ஆண்டு சித்திரை திருவிழா கடந்த 8-ந்தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது.
அதனைத்தொடர்ந்து ஒவ்வொரு நாளும் சிம்ம வாகனம், பூத வாகனம், அன்ன வாகனம், ரிஷப வாகனம், யானை வாகனம், மரக்குதிரை வாகனம் உள்ளிட்ட பல்வேறு வாகனங்களில் அம்மன் திருவீதி உலா வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தார். விழாவின் 9-ம் திருநாளான நேற்று முன்தினம் காலை 10 மணிக்கு அம்மன் பல்லக்கில் புறப்பாடாகி, வழிநடை உபயங்கள் கண்டருளி நேற்று காலை 7 மணிக்கு மூலஸ்தானம் சென்றடைந்தார்.
இதைத்தொடர்ந்து சித்திரை திருவிழாவின் சிகர நிகழ்ச்சியான தேரோட்டம் நேற்று நடந்தது. இதையொட்டி தேரில் வாழைத்தார்கள், கரும்புகள், இளநீர் மற்றும் நுங்கு குலைகள் கட்டி தொங்கவிடப்பட்டு பூக்களால் அலங்கரிக்கப்பட்டிருந்தது. உற்சவ மண்டபத்தில் அம்மனுக்கு அபிஷேக, ஆராதனைகள் செய்யப்பட்டு சிறப்பு அலங்காரத்துடன் காட்சி தந்தார். காலை 10.25 மணியளவில் அம்மன் அங்கிருந்து புறப்பாடாகி மிதுன லக்னத்தில் திருத்தேரில் எழுந்தருளினார். அப்போது தேரை வடம் பிடித்து இழுக்க பொதுமக்கள், பக்தர்கள் பலர் கோவில் முன்பு திரண்டு நின்றனர்.
காலை 10.50 மணிக்கு கொடியசைக்கப்பட்டு, வாணவேடிக்கை முழங்க தேர் வடம் பிடித்து இழுக்கப்பட்டது. திருச்சி மாவட்ட கலெக்டர் கே.ராஜாமணி பங்கேற்று தேரை வடம் பிடித்து இழுத்தார். தேருக்கு முன்பாக மேள, தாளங்கள் முழங்க இசைக்குழு சென்றது. தேரை இழுக்கும் ஆர்வத்தில் பொதுமக்கள் முண்டியடித்ததால் அவ்வப்போது நெரிசல் ஏற்பட்டது. எனினும் அசம்பாவிதங்களை தடுக்கும் பொருட்டு போலீசார் தேரை சுற்றிலும் கயிற்றை பிடித்தபடி பாதுகாப்பு பணியை மேற்கொண்டனர்.
மக்கள் வெள்ளத்தில் தேரானது ஆடி, அசைந்து வந்த போது பக்தி பரவசத்தில் பொதுமக்கள், பக்தர்கள் ஓம் சக்தி... பராசக்தி... என்கிற கோஷங்களை விண்ணதிர முழங்கி, பயபக்தியுடன் சாமி தரிசனம் செய்தனர். மேலும் தேங்காய் உடைத்து சூடமேற்றி வழிபாடு செய்தனர். முக்கிய வீதிகளில் வலம் வந்த தேர் மாலை 4.10 மணிக்கு நிலைக்கு வந்தது.
தேரோட்டத்தையொட்டி திருச்சி மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்தும் பக்தர்கள் பலர் பால்குடம் எடுத்தும், காவடி தூக்கியும், மலர் கரகம் எடுத்தும், அக்னிச்சட்டி ஏந்தியும், முளைப்பாரி எடுத்தும் பாதயாத்திரையாக கோவிலுக்கு வந்தனர். திருச்சி-சென்னை தேசிய நெடுஞ்சாலை சர்வீஸ் ரோடு வழியாக அதிக பக்தர்கள் ஒரே நேரத்தில் சென்றதால் அங்கு ஏராளமான போலீசார் பணியமர்த்தப்பட்டு வாகன போக்குவரத்தினை கண்காணித்தனர்.
சில பெண்கள், குழந்தைகளை கரும்பு தொட்டிலில் படுக்க வைத்து தூக்கிக்கொண்டு வந்து, அம்மனுக்கு நேர்த்திக்கடன் செலுத்தினர். உடலில் அலகு குத்திக்கொண்டும், அந்தரத்தில் தொங்கியபடி பறவை காவடி மற்றும் நாக்கு-கன்னங்களில் அலகு குத்திக்கொண்டு வந்தும், முள்படுக்கையில் படுத்தும் பக்தர்கள் அம்மனுக்கு நேர்த்திக்கடனை செலுத்தினர். அப்போது அவர்களிடம் பொதுமக்கள் பலர் ஆசி பெற்று திருநீறு பூசிக்கொண்டனர். இரவு 9 மணியளவில் திருத்தேரிலிருந்து அம்மன் புறப்பாடாகி மூலஸ்தானம் சென்றடைந்தார். சித்திரை வெயிலின் தாக்கம் சற்று அதிகமாக இருந்ததால் தேரோடும் வீதியில் தண்ணீர் தெளிக்கப்பட்டிருந்தது. ஆங்காங்கே பல்வேறு அமைப்புகள் சார்பில் தண்ணீர் பந்தல் அமைத்து வெயிலுக்கு இதமாக நீர்மோர், பானகம், சர்பத் உள்பட குளிர்பானங்கள் வழங்கப்பட்டன. பல்வேறு இடங்களில் அன்னதானமும் நடைபெற்றது. இதனால் தேசியநெடுஞ்சாலையின் ஓரங்களில் பாக்கு மரத்தட்டுகள், பிளாஸ்டிக் கப்புகள், பாலித்தீன் பைகள் உள்ளிட்டவை ஆங்காங்கே சிதறி கிடந்தன. அதனை துப்புரவு பணியாளர்கள் அவ்வப்போது டிராக்டரில் அள்ளிக்கொண்டு சென்று தூய்மை பணியை மேற்கொண்டனர்.
இன்று (புதன்கிழமை) காலை 10 மணிக்கு அம்மன் பல்லக்கில் புறப்பாடாகி, வெள்ளி காமதேனு வாகனத்தில் பக்தர்களுக்கு அருள்பாலிக்கிறார். 12-ம் திருநாளான நாளை (வியாழக்கிழமை) காலை 10 மணிக்கு பல்லக்கிலும், இரவு 8 மணிக்கு முத்து பல்லக்கிலும் அம்மன் புறப்பாடாகிறார். 13-ம் திருநாளான 20-ந்தேதி பகல் 12 மணிக்கு அம்மன் புறப்பாடாகி ஆஸ்தான மண்டபத்தை அடைகிறார். பின்னர் மாலை 5 மணிக்கு அபிஷேக, ஆராதனை நடக்கிறது. இரவு 8 மணிக்கு தெப்ப உற்சவம் கண்டு, வழிநடை உபயங்கள் கண்டருளி மூலஸ்தானம் சென்றடைகிறார். அன்றைய தினத்துடன் சித்திரை பெருவிழா நிறைவுபெறுகிறது.
தேரோட்டத்தையொட்டி திருச்சி மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளிலிருந்தும், வெளிமாவட்டங்களில் இருந்தும் பக்தர்களின் வசதிக்காக சிறப்பு பஸ்கள் இயக்கப்பட்டன. சமயபுரம் நால்ரோடு அருகே சக்தி நகர், திருச்சி-சென்னை தேசியநெடுஞ்சாலை ஆட்டுச்சந்தை நடைபெறும் இடம் உள்ளிட்டவற்றில் தற்காலிக பஸ்நிலையங்கள் அமைக்கப்பட்டிருந்தன. கோவிலை சுற்றியுள்ள பகுதிகளில் ச.கண்ணனூர் பேரூராட்சி செயல் அலுவலர் குமரன் தலைமையில், பக்தர்களின் வசதிக்காக ஆங்காங்கே தற்காலிக குடிநீர் தொட்டிகள் வைக்கப்பட்டிருந்தன. மேலும் தண்ணீர் வசதியுடன் கூடிய தற்காலிக கழிவறை வசதியும் செய்யப்பட்டிருந்தன. விழாவிற்கான ஏற்பாடுகளை கோவில் இணை ஆணையர் குமரதுரை மற்றும் பணியாளர்கள், ஊழியர்கள் செய்திருந்தனர்.