கோவில் திருவிழாவையொட்டி மஞ்சுவிரட்டு மாடுபிடி வீரர்கள் போட்டி போட்டு அடக்கினர்

பொன்னமராவதி அருகே கோவில் திரு விழாவையொட்டி நடந்த மஞ்சுவிரட்டில் காளைகளை மாடுபிடி வீரர்கள் போட்டி போட்டு அடக்கினர்.

Update: 2018-04-17 22:30 GMT
பொன்னமராவதி,

புதுக்கோட்டை மாவட்டம், பொன்னமராவதி அருகே உள்ள ஆர்.பாலக்குறிச்சியில் பிரசித்தி பெற்ற முத்துமாரியம்மன் கோவில் உள்ளது. இக்கோவில் திருவிழா கடந்த மாதம் 25-ந்தேதி காப்புக்கட்டுதலுடன் தொடங்கியது. அதனை தொடர்ந்து நேற்று முன்தினம் தேரோட்டம் நடந்தது. திருவிழாவையொட்டி மஞ்சுவிரட்டு நடத்த ஊர்பொதுமக்கள், விழாக்குழுவினர் முடிவு செய்தனர். அதன்பிடி மஞ்சுவிரட்டு நடத்துவதற்கான முன்னேற்பாடு பணிகள் நடந்தது.

400 காளைகள்

இந்நிலையில் ஆர்.பால குறிச்சியில் நேற்று மஞ்சு விரட்டு நடந்தது. இதில் புதுக்கோட்டை, சிவகங்கை, திருச்சி, திண்டுக்கல், மதுரை உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் இருந்து கொண்டு வரப்பட்ட 400 காளைகள் ஆங்காங்கே அவிழ்த்து விடப்பட்டன. சீறிப்பாய்ந்து வந்த காளைகளை மாடுபிடி வீரர்கள், இளைஞர்கள் போட்டி, போட்டு அடக்கினர். சில காளைகள் மாடுபிடி வீரர்களின் கையில் சிக்கவில்லை. சில காளைகள் மாடுபிடி வீரர்களை தூக்கி வீசியது. மாடுபிடி வீரர்கள் காளைகளை அடக்கி அதில் இருந்த வேட்டி, துண்டுகளை பரிசாக பெற்றனர். பாதுகாப்பு ஏற்பாடுகளை உலகம்பட்டி போலீசார் செய்திருந்தனர். மஞ்சுவிரட்டுக்கான ஏற்பாடுகளை ஆர்.பாலகுறிச்சி, ரெகுநாதபட்டி, விடத்தலாம்பட்டி, சீகம்பட்டி, வைரவன்பட்டி, கோபால்பட்டி மற்றும் சுற்றுவட்டார கிராமமக்கள் செய்திருந்தனர். 

மேலும் செய்திகள்