தரமான குடிநீர் வழங்கக்கோரி பொதுப்பணித்துறை அலுவலகம் முற்றுகை
தரமான குடிநீர் வழங்கக் கோரி பொதுப் பணித்துறை அலுவல கத்தை பொதுமக்கள் முற்றுகையிட்டு போராட் டம் நடத்தினர்.
புதுச்சேரி,
புதுவை உழவர்கரை நகராட்சிக்கு உட்பட்ட சாமிபிள்ளை தோட்டம் பகுதியில் 5 ஆயிரத்திற்கும் மேற்பட்ட மக்கள் வசித்து வருகின்றனர். இந்த பகுதியில் குடிநீர் மாசடைந்து உப்புத் தன்மையாக உள்ளது. இது பற்றி அப்பகுதி மக்கள் கடந்த சட்டமன்ற தேர்தலின்போது புகார் தெரிவித்தனர். தரமான குடிநீர் வழங்கப்படும் என அப்போது அரசு உறுதி யளித்தது. ஆனால் இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக் கப்படவில்லை.
இதனை கண்டித்தும், தரமான குடிநீர் வழங்க வலியுறுத்தியும் அகில இந்திய ஜனநாயக இளைஞர் சங்கத்தினர் நேற்று காலை சிவாஜி சிலை அருகே ஒன்று கூடினர். அங்கிருந்து அவர்கள் மடுவுபேட்டில் உள்ள பொதுப்பணித்துறை அலுவல கம் நோக்கி ஊர்வலமாக சென்றனர். சங்க செயலாளர் லெனின் தலைமை தாங்கி னார். ஊர்வலத்தில் சங்க தலைவர் மணி, செயலாளர் மாதவன், பொருளாளர் அரிச்சந்திரன், துணைத் தலைவர் திலீப் மற்றும் பலர் கலந்துகொண்டனர்.
ஊர்வலம் கிழக்கு கடற்கரை சாலை வழியாக மடுவு பேட்டை அடைந்தது. அங்கு அவர்கள் பொதுப்பணித்துறை அலு வலகத்தை முற்றுகை யிட்டு போராட்டம் நடத்தி னர். அப்போது அவர்கள் தண்ணீர் பாட்டில்களை வைத்து அதற்கு மாலை அணிவித்து இருந்தனர்.
அவர்களிடம் பொதுப் பணித்துறை அதிகாரிகள் சமாதான பேச்சுவார்த்தை நடத்தினர். இதில், இன்னும் ஒரு வாரத்தில் தரமான குடிநீர் வழங்க அரசிடம் பேசி நடவடிக்கை எடுப்பதாக உறுதி அளிக்கப்பட்டது. இதை ஏற்று போராட்டத்தை அவர்கள் கைவிட்டனர். இதனால் அந்த பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.