உயர்த்தப்பட்ட தினக்கூலி வழங்கக்கோரி மின்வாரிய ஒப்பந்த தொழிலாளர்கள் ஆர்ப்பாட்டம்

உயர்த்தப்பட்ட தினக்கூலி வழங்கக்கோரி மின்வாரிய ஒப்பந்த தொழிலாளர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

Update: 2018-04-17 22:15 GMT
ராமநாதபுரம்,

ராமநாதபுரம் மாவட்ட தமிழ்நாடு மின் ஊழியர் மத்திய அமைப்பின் சார்பில் ராமநாதபுரம் மின் வினியோக வட்டத்தில் பல ஆண்டுகளாக ஒப்பந்த தொழிலாளர்களாக வேலை பார்த்து வருபவர்களுக்கு, ஊதிய உயர்வு முத்தரப்பு பேச்சுவார்த்தையில் ஒப்புக்கொண்டபடி தினக்கூலி ரூ.380–ஐ வழங்க வேண்டும் என்று வலியுறுத்தி ராமநாதபுரம் ஒருங்கிணைந்த மின்வாரிய அலுவலகம் முன்பு ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

 ஆர்ப்பாட்டத்துக்கு தலைவர் ராமச்சந்திரபாபு, மாவட்ட செயலாளர் முருகன் ஆகியோர் தலைமை தாங்கினர். இதில் தமிழ்நாடு மின் ஊழியர் மத்திய அமைப்பு நிர்வாகிகளும், ஒப்பந்த தொழிலாளர்களும் கலந்து கொண்டனர். முன்னதாக ஒப்பந்த தொழிலாளர்கள் ராமநாதபுரம் அம்மா பூங்காவில் இருந்து ஊர்வலமாக புறப்பட்டு வந்து ஆர்ப்பாட்டம் செய்தனர்.

மேலும் செய்திகள்