உசிலம்பட்டியில் சுகாதாரமான குடிநீர் வழங்க கோரி சாலை மறியல்
உசிலம்பட்டியில் சுகாதாரமான குடிநீர் வழங்கக்கோரி பொதுமக்கள் சாலை மறியல் போராட்டம் நடைபெற்றது.
உசிலம்பட்டி,
உசிலம்பட்டி நகராட்சிக்கு உட்பட்ட 15, 16–வது வார்டுகளில் வழங்கப்பட்ட குடிநீர் சுகாதராமற்ற நிலையில் உள்ளதாகக்கூறி பொதுமக்கள் புகார் தெரிவித்தனர். இதுகுறித்து அவர்கள் சம்பந்தப்பட்ட அதிகாரிகளிடம் கூறியும் எவ்வித நடவடிக்கையும் எடுக்கவில்லை என்று கூறப்படுகிறது.
இந்தநிலையில் குடிநீருக்காக அலைந்து அவதிப்பட்ட பொதுமக்கள் ஆத்திரமடைந்து உசிலம்பட்டி–மதுரைச்சாலையில் உள்ள மலையாண்டி தியேட்டர் அருகில் திடீரென்று சாலை மறியலில் ஈடுபட்டனர். தகவலறிந்து வந்த நகராட்சி அதிகாரிகள் மறியலில் ஈடுபட்டவர்களிடம் பேச்சு வார்த்தை நடத்தினர்.
அதில் சுகாதாரமான குடிநீர் கிடைக்க நகராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுத்து வருகிறது. எனவே தொடர்ந்து சுகாதாரமான முறையில் குடிநீர் வினியோகம் செய்யப்படும். ஆனால் பொது வினியோகத்திற்கு வழங்கப்படும் குடிநீரை பொதுமக்கள் மின்மோட்டார்கள் வைத்து தண்ணீர் எடுப்பதை தவிர்க்க வேண்டும்.
இந்தநிலைய தொடர்ந்தால், மின் மோட்டார்கள் வைத்து தண்ணீர் எடுப்பவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என கூறினர். அதைத்தொடர்ந்து மறியல் போராட்டம் கைவிடப்பட்டது. இந்த சாலை மறியலினால் சிறிது நேரம் உசிலம்பட்டி–மதுரை சாலையில் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது.