பாலியல் கொடுமைகளை கண்டித்து சிவகங்கையில் மகிளா காங்கிரஸ் ஆர்ப்பாட்டம்

பாலியல் கொடுமைகளை கண்டித்து சிவகங்கையில் மகிளா காங்கிரஸ் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

Update: 2018-04-17 22:30 GMT
சிவகங்கை,

சிவகங்கை மாவட்ட மகிளா காங்கிரஸ் சார்பில் பெண்களுக்கு எதிரான பாலியல் கொடுமைகளை கண்டித்தும், அதுதொடர்பாக மத்திய அரசு உரிய நடவடிக்கை எடுக்க வலியுறுத்தியும் சிவகங்கை அரண்மனை வாசல் முன்பு கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. மாநில மகிளா காங்கிரஸ் பொதுச் செயலாளர் ஸ்ரீவித்யா கணபதி தலைமை தாங்கினார். மாவட்ட காங்கிரஸ் தலைவர் சத்தியமூர்த்தி முன்னிலை வகித்தார். ஆர்ப்பாட்டத்தில் முன்னாள் எம்.எல்.ஏ. சுந்தரம் அருணகிரி, மாவட்ட துணைத்தலைவர் சண்முகராஜன், முன்னாள் மாவட்ட தலைவர் ராஜரத்தினம், நகர தலைவர் பிரபாகரன், வட்டார தலைவர்கள் மதியழகன், நாகராஜன், வேலாயுதம், ரமேஷ், நகர மகிளா காங்கிரஸ் தலைவி ஏலம்மாள், மகளிரணி நிர்வாகிகள் நாகலட்சுமி, பாண்டியம்மாள் உள்பட பலர் கலந்துகொண்டனர்.

மேலும் செய்திகள்