ஆற்காடு அருகே கழுத்தை நெரித்து பிளஸ்-1 மாணவி கொலை

ஆற்காடு அருகே கழுத் தை நெரித்து பிளஸ்-1 மாணவி கொலை செய்யப்பட்டார். இது தொடர்பாக போலீஸ் சூப்பிரண்டு பகலவன் நேரில் விசாரணை நடத்தினார்.

Update: 2018-04-17 22:30 GMT
ஆற்காடு,

ஆற்காடு அருகே ஒழலை கிராமத்தை சேர்ந்தவர் ராதா. இவரது கணவர் தாழனூர் கிராமத்தை சேர்ந்த டீக்காராமன். இவர்களது மகன் நவீன்குமார் (19) மகள் சங்கீதா (16).

இந்த நிலையில் ராதா கணவனுடன் கருத்து வேறுபாடு ஏற்பட்டு பிரிந்து சென்றுவிட்டார். பின்னர் ஆற்காடு மாசாப்பேட்டை பகுதியை சேர்ந்த பழனி என்பவருடன் சேர்ந்து கே.வேளூர் அருகே உள்ள ஒழலை கிராமத்தில் கடந்த 15 ஆண்டுகளாக வசித்து வந்தார். இதற்கிடையில் பழனி கடந்த 2013-ம் ஆண்டு சாலை விபத்தில் இறந்து விட்டார்.

இதற்கிடையில் ராதாவும் உடல்நிலை சரியில்லாமல் கடந்த சில மாதங்களுக்கு முன்பு இறந்து விட்டார். இதனால் ராதாவின் அக்கா சிப்காட் அருகே அக்ராவரம் பகுதியை சேர்ந்த ராணி, சங்கீதாவுடன் ஒழலையில் தங்கி வசித்து வந்துள்ளார்.

சங்கீதா கே.வேளூரில் உள்ள அரசு மேல்நிலைப் பள்ளியில் பிளஸ்-1 படித்து வந்தார். கடந்த சில நாட் களுக்கு முன்பு பிளஸ்-1 தேர்வு முடிந்து விட்ட நிலையில் நவீன்குமார் தனது தங்கை சங்கீதாவை தமிழ்புத்தாண்டு அன்று தாழனூரில் உள்ள தந்தை டீக்காராமன் வீட்டிற்கு அழைத்து சென்றார்.

நேற்று முன்தினம் சங்கீதா கல்வி உதவித்தொகைக்கு விண்ணப்பிக்க ஆதார் அட்டை தேவைப்படுவதாக அண்ணன் நவீன்குமாரிடம் கூறிவிட்டு ஒழலை கிராமத் திற்கு சென்றுள்ளார். மீண்டும் வீட்டிற்கு வராததால் நவீன் குமார், தங்கை சங்கீதாவுக்கு போன் செய்த போது வீட்டுக்கு வருவதாக அவர் தெரிவித் துள்ளார்.

பின்னர் மீண்டும் போன் செய்தபோது செல்போன் அணைத்து வைக்கப்பட்டு இருந்தது. இதையடுத்து நேற்று காலை நவீன்குமார் ஒழலையில் உள்ள வீட்டிற்கு சென்றார். அப்போது வீட்டின் கட்டிலின் அடியில் துணிகள் கிழிந்து அலங்கோலமான நிலையில் கழுத்து நெரிக்கப் பட்டு ரத்த காயங்களுடன் சங்கீதா கொலை செய்யப்பட்டு பிணமாக கிடந்தார்.

இதனால் அதிர்ச்சி அடைந்த நவீன்குமார் இதுதொடர்பாக ஆற்காடு தாலுகா போலீசுக்கு தகவல் தெரிவித்தார். அதன்பேரில் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற போலீசார் மாணவி யின் பிணத்தை மீட்டு ஆற்காடு அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர்.

சம்பவ இடத்தை மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு பகலவன், ராணிப்பேட்டை துணை போலீஸ் சூப்பிரண்டு கலைச்செல்வன் ஆகியோர் நேரில் பார்வையிட்டு விசா ரணை நடத்தினர்.

கொலை செய்யப்பட்டு கிடந்த மாணவி சங்கீதாவின் கையில் பிளேடால் கிழிக்கப் பட்ட காயங்கள் இருந்தன. அருகில் அவர் அணிந்திருந்த வளையல்களும் உடைந்து கிடந்தன. உடலின் பல்வேறு இடங்களிலும் காயங்கள் இருந்தன. ரத்தம் கொட்டிய இடத்தில் எறும்புகளாக காணப் பட்டது.

இதனை வைத்து பார்க்கும் போது அவரை யாராவது பாலியல் பலாத்காரம் செய்ய முயன்றிருக்கலாம் என்றும் அவர் மறுத்ததால் ஆத்திரம் அடைந்து கொலையாளி தாக்கியநேரத்தில் அதனை தடுத்தபோது வளையல்கள் உடைக்கப்பட்டிருக்கலாம் எனவும் போலீசார் கருது கின்றனர். மேலும் கொலை நடந்த வீடு மாடி வீடாகும். கீழ்தளத்தில் கதவு பூட்டப்பட்டு ஓலை தட்டி மறித்து வைக்கப் பட்டிருக்கும். ஆனால் நேற்று கதவு பூட்டப்படாத நிலையில் ஓலை தட்டி மட்டும் மறித்து வைக்கப்பட்டிருந்தது.

கொலை குறித்து துப்பு துலக்கி கொலையாளிகளை பிடிப்பதற்காக வேலூரில் இருந்து தடயவியல் நிபுணர்கள் வரவழைக்கப்பட்டனர். அவர் கள் கொலை நடந்த இடத்தில் தடயங்களை சேகரித்தனர். மேலும் கதவு மற்றும் ஓலை தட்டியில் பதிவாகியிருந்த மர்மநபர்களின் ரேகை களை யும் தடயவியல் நிபுணர் கள் பதிவு செய்து சேகரித்தனர்.

மோப்ப நாயும் வரவழைக்கப்பட்டு சோதனை நடத்தப்பட்டது. மோப்பநாய் சம்பவ இடத்திலிருந்து சிறிதுதூரம் வரை சென்று திரும்பி விட்டது. இந்த கொலை சம்பவம் குறித்து ஆற்காடு தாலுகா போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின் றனர். பிரேத பரிசோதனைக்கு பின்னர் இந்த கொலையில் வேறு மர்மங்கள் உள்ளதா? என்பது தெரியவரும். முதல் கட்டமாக கொலை செய்யப் பட்ட சங்கீதாவின் அண்ணன் மற்றும் குடும்பத்தினரிடம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

மேலும் செய்திகள்