மாமூல் வசூலிப்பதில் தகராறு: ரவுடியை அரிவாளால் வெட்டிய 4 பேர் கைது

மாமூல் வசூலிப்பதில் தகராறு ஏற்பட்டதில் ரவுடியை அரிவாளால் வெட்டிய 4 பேர் கைது செய்யப்பட்டனர்.

Update: 2018-04-17 21:45 GMT
திருவொற்றியூர்,

திருவொற்றியூரை அடுத்த எண்ணூர் சுனாமி குடியிருப்பு பகுதியில் வசித்து வருபவர் ராஜேஷ் (வயது 25). பிரபல ரவுடியான இவர் நேற்று இரவு காசிமேடு மீன்பிடி துறைமுகம் அருகே நடந்து சென்றார். அப்போது, புதுவண்ணாரப்பேட்டை ஒத்தவாடை பகுதியை சேர்ந்த ரவுடிகள் ஜப்பான் என்கிற ஸ்டீபன் (23), அவரது கூட்டாளிகள் சாரா என்கிற சரத் (22), அருண் (21), வடிவேலு (24) ஆகியோர் ராஜேஷை அரிவாளால் வெட்டி விட்டு தப்பிச்சென்றனர்.

இதுபற்றி தகவலறிந்த காசிமேடு மீன்பிடி துறைமுக போலீசார் விரைந்து சென்று பலத்த காயமடைந்த ராஜேசை மீட்டு ஸ்டான்லி அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். மேலும், இந்த சம்பவம் குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து ஸ்டீபன், சரத், அருண், வடிவேலு ஆகியோரை கைது செய்து விசாரித்தனர். விசாரணையில், மாமூல் வசூல் செய்வதில் ஏற்பட்ட தகராறில் ராஜேஷை அரிவாளால் வெட்டியது தெரியவந்தது. தொடர்ந்து போலீசார் விசாரித்து வருகின்றனர்.

மேலும் செய்திகள்