செங்கல்பட்டில் காரில் இருந்த ரூ.1½ லட்சம் திருட்டு

செங்கல்பட்டில் காரில் இருந்த ரூ.1 லட்சத்து 60 ஆயிரம் திருடப்பட்டது.

Update: 2018-04-17 21:45 GMT
செங்கல்பட்டு,

சென்னை ராஜ கீழ்ப்பாக்கத்தைச் சேர்ந்தவர் திருஞானசம்மந்தம். கட்டுமானதொழிலாளி. இந்நிலையில் நேற்று மதியம் தான் வந்த காரை செங்கல்பட்டு அரசு பஸ் டெப்போ அருகே நிறுத்திவிட்டு கார் டிரைவர் லோகநாதன் என்பவரை காரில் இருக்குமாறு கூறிவிட்டு நண்பருடன் அங்குள்ள அரசு அலுவலகத்திற்கு சென்றார்.

அப்போது அந்த வழியாக சென்ற மர்மநபர் லோகநாதனிடம் கார் டயரில் காற்று இல்லை என்று கூறினார். உடனே லோகநாதன் கீழே இறங்கி பார்த்தார். அதற்குள் அந்த மர்ம நபர் காரில் இருந்த பையை திருடி சென்று விட்டார். இது குறித்து லோகநாதன் திருஞானசம்மந்தத்திடம் தகவல் தெரிவித்தார்.

பையில் இருந்த ரூ.1 லட்சத்து 60 ஆயிரம், மனையின் வரைபடம், அலுவலக சாவி, வங்கி கணக்கு புத்தகம் போன்றவை திருடப்பட்டிருப்பதாக திருஞானசம்மந்தம் செங்கல்பட்டு டவுன் போலீசில் புகார் செய்தார். அதன்பேரில் போலீசார் விசாரித்து வருகின்றனர்.

இது போல அதன் அருகே சென்னை செம்பாக்கம் பஜனை கோவில் தெருவை சேர்ந்த பாலாஜி என்பவரது கார் நிறுத்தப்பட்டிருந்தது. அவரது கார் கண்ணாடி உடைக்கப்பட்டு அதில் இருந்த செல்போன், மடிக்கணினி திருடப்பட்டிருந்தது. பாலாஜி அளித்த புகாரின் பேரில் செங்கல்பட்டு டவுன் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். 

மேலும் செய்திகள்