சிறுத்தொண்டநாயனார் குருபூஜையை முன்னிட்டு மன்மதசாமி கோவிலில் அமுது படையல் விழா
தா.பழூர் அருகே சீனிவாசபுரம் கிராமத்தில் உள்ள மன்மதசாமி கோவிலில் சிறுத்தொண்டநாயனாரின் குருபூஜையை முன்னிட்டு, அமுது படையல் விழா நடைபெற்றது.
தா.பழூர்,
63 நாயன்மார்களில் பிரசித்தி பெற்றவர்களில் சிறுத்தொண்ட நாயனாரும் ஒருவர். நாயன்மார்கள் ஒவ்வொருவரும் இறைவன் புகழ்பாடியும், தொண்டுகள் மேற்கொண்டும் என ஒவ்வொருவரும் தனிப்பாதையை அமைத்து, சிவபெருமானின் திருவடியை அடைந்தனர். இதில் சிறுத்தொண்ட நாயனார், தினம் சிவனடியாருக்கு அமுது கொடுத்த பிறகே, அவரும், அவரது குடும்பத்தினரும் சாப்பிடுவதை வழக்கமாக கொண்டு இருந்தனர்.
இதை ஒரு தொண்டாகவே எண்ணி வாழ்ந்து வந்தார். அவரை சோதனை செய்வதற்காக மாறுவேடமிட்டு வந்த சிவபெருமான், பிள்ளைக்கறி கேட்டதற்கு இணங்க தனது பிள்ளையே உணவாக சமைத்து கொடுத்தார். அவரது தொண்டை எண்ணி வியந்த சிவபெருமான் அவருக்கு காட்சி கொடுத்து அருள்பாலித்தார். இந்தநாளை போற்றும் விதமாக அனைத்து மன்மதசாமி கோவில்களிலும் அமுது படையல் விழா வெகு விமர்சையாக நடைபெறும்.
அதன்படி அரியலூர் மாவட்டம் தா.பழூரை அடுத்த சீனிவாசபுரம் கிராமத்தில் உள்ள மன்மதசாமி கோவிலில் ஒவ்வொரு ஆண்டும் அமுது படையல் விழா சிறப்பாக கொண்டாடப்படும். இந்த ஆண்டு விழாவை முன்னிட்டு மன்மத சாமிக்கு சிறப்பு அபிஷேகம் நடைபெற்றது. பின்னர் சிறுத்தொண்ட நாயனாரின் மகனாக அவதரித்த சீராளானை மாவிலக்கினால் தயாரிக்கப்பட்ட உருவபொம்மையை வழிபட்டனர்.
பின்னர் அதை சுமந்து கொண்டு, மன்மத சாமி கோவிலுக்கு வந்த அமுது படையலிட்டனர். தொடர்ந்து சிவபெருமான் வேடமிட்டு இருந்த ஒருவர் அனைவருக்கும் அருட்பிரசாதம் வழங்கி ஆசி வழங்கினார்.
அமுது படையல் விழாவில் பங்கேற்று, சாமிக்கு படையிலிட்ட திருவமுதை பக்தியுடன் பெண்கள் மடிபிச்சை கேட்டு பெறவேண்டும். பின்பு கணவன்-மனைவி இருவரும் அன்னத்தை உண்டு வழிபட்டால் குழந்தை வரம் கிட்டும் என்பது அப்பகுதி மக்களின் நம்பிக்கை. இதை கருத்தில் கொண்டு, குழந்தை இல்லாதவர்களும், திருமணமாகாதவர்களும் திரளாக கலந்து கொண்டு வழிபட்டனர்.
அமுது படையல் திருவிழாவையோட்டி, சீனிவாசபுரம் கிராமத்தில் அன்று யார் வீட்டிலும் உணவு சமைப்பதில்லை. இறைவனுக்கு படையலிட்ட திருவமுதையே உணவாக ஏற்றுக்கொண்டு, ஊர் ஒற்றுமையை வெளிப்படுத்தும் வகையில், கோவில் முன்பு வரிசையில் அமர்ந்து உணவை சாப்பிட்டனர் என்பது குறிப்பிடத்தக்கது. விழாவை சீனிவாசபுரத்தை சேர்ந்த ஊர் முக்கியஸ்தர்கள் மற்றும் கிராம நாட்டாண்மைகள் செய்து இருந்தனர்.