பெண் தாசில்தாரின் தாயாரிடம் ஏ.டி.எம்.கார்டை திருடி ரூ.37ஆயிரம் அபேஸ் போலீஸ் வலைவீச்சு
சுசீந்திரம் கோவிலில் சாமி கும்பிட சென்ற பெண் தாசில்தாரின் தாயாரிடம் ஏ.டி.எம்.கார்டை திருடி ரூ.37 ஆயிரம் அபேஸ் செய்த மர்ம நபர்களை போலீசார் வலைவீசி தேடிவருகிறார்கள்.
மேலகிருஷ்ணன்புதூர்,
சுசீந்திரம் மேலரதவீதியை சேர்ந்தவர் சுப்பிரமணி. இவர், தாசில்தாராக பணியாற்றி ஓய்வு பெற்றவர். கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு இறந்துவிட்டார். இவருடைய மனைவி பானுமதி(வயது 69).
இவர்களின் மகள் லலிதா திருவண்ணாமலை மாவட்டம் ஆரணியில் தாசில்தாராக பணியாற்றி வருகிறார். இதனால் பானுமதி மட்டும் சுசீந்திரத்தில் உள்ள வீட்டில் தனியாக வசித்து வருகிறார். கனி காணும் நிகழ்ச்சியின்போது பானுமதி சாமி கும்பிட சுசீந்திரம் கோவிலுக்கு சென்றார்.
சாமி கும்பிட்டுவிட்டு திரும்பும்போது அவரது கைப்பையை யாரோ மர்ம நபர்கள் திருடி சென்றுவிட்டனர். அந்த கைப்பையில் ரூ.4 ஆயிரத்து 500 மற்றும் ஏ.டி.எம். கார்டு, ஆதார், பான் கார்டுகள் வைத்திருந்தார்.
இதனால் அதிர்ச்சி அடைந்த பானுமதி கைப்பையை கோவிலில் பல இடங்களில் தேடியும் கிடைக்கவில்லை.
கைப்பை திருட்டுப்போன சில மணி நேரத்தில் மர்ம நபர்கள் ஏ.டி.எம். கார்டை பயன்படுத்தி பானுமதியின் வங்கிக் கணக்கில் இருந்த ரூ.36 ஆயிரத்து 800–ஐ எடுத்துள்ளனர். பானுமதி ஏ.டி.எம். கார்டு பின்னால் ரகசிய எண்ணை குறித்து வைத்துள்ளார். இதன் மூலம் மர்ம நபர்கள் எளிதில் பணத்தை அபேஸ் செய்துள்ளனர்.
ஏற்கனவே கைப்பையில் இருந்த 4 ஆயிரத்து 500 பணத்துடன் சேர்த்து மொத்தம் ரூ.41,300 அபேஸ் செய்யப்பட்டுள்ளது.
இதுபற்றி பானுமதி சுசீந்திரம் போலீசில் புகார் செய்தார். சப்–இன்ஸ்பெக்டர் பாரத்லிங்கம், சிறப்பு சப்–இன்ஸ்பெக்டர் சலீம் ஆகியோர் வழக்குப்பதிவு மர்ம நபர்களை விலைவீசிதேடிவருகிறார்கள்.
மர்ம நபர்களை கண்டுபிடிக்க கோவிலில் இருந்த கண்காணிப்பு கேமராக்களின் காட்சியை போலீசார் ஆய்வு செய்து வருகிறார்கள்.
மேலும், ஏ.டி.எம். கார்டு மூலம் பணம் எடுத்தபோது அங்குள்ள கேமராவில் பதிவான காட்சிகள் மூலம் கைப்பையை திருடிய நபர்களை கண்டுபிடிக்க போலீசார் தீவிர முயற்சியில் ஈடுபட்டு உள்ளனர்.