நானார் எண்ணெய் சுத்திகரிப்பு திட்ட அலுவலகத்தை நவநிர்மாண் சேனாவினர் அடித்து நொறுக்கினர்

எண்ணெய் சுத்திகரிப்பு திட்ட அலுவலகத்தை நவநிர்மாண் சேனாவினர் அடித்து நொறுக்கிதால் பரபரப்பு ஏற்பட்டது.

Update: 2018-04-16 23:33 GMT
மும்பை,

மும்பையில் உள்ள நானார்எண்ணெய்சுத்திகரிப்பு திட்ட அலுவலகத்தை நவநிர்மாண் சேனா கட்சியினர் அடித்து நொறுக்கினர்.

ராய்காட் மாவட்டத்தில் ரூ.1 லட்சம் கோடி மதிப்பீட்டில் நானார் எண்ணெய் சுத்திகரிப்பு திட்டத்தை நிறைவேற்ற மாநில அரசு முடிவு செய்து உள்ளது. இந்த திட்டத்திற்காக சுமார் 14 ஆயிரம் ஏக்கர் நிலம் கையகப்படுத்தப்பட உள்ளது. இந்த திட்டத்துக்கு மாநில அரசு கூட்டணியில் அங்கம் வகிக்கும் சிவசேனா மற்றும்நவநிர்மாண் சேனா கட்சியினர் கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.

இந்தநிலையில் நேற்று மும்பை பாந்திராவில் உள்ள நானார் எண்ணெய் சுத்திகரிப்பு திட்ட அலுவலகத்திற்குள் நவநிர்மாண் சேனா கட்சியினர் புகுந்தனர். அவர்கள் எண்ணெய் சுத்திகரிப்பு திட்டத்திற்கு எதிராக கோஷங்களை எழுப்பிக்கொண்டே அலுவலகத்தில் இருந்த பொருட்களை அடித்து நொறுக்கினர். சில நிமிடங்களில் அலுவலகத்தை சூறையாடிவிட்டு அவர்கள் தப்பி சென்றனர். இந்த சம்பவத்தால் நேற்று பாந்திரா பகுதியில் பரபரப்புஏற்பட்டது.

மேலும் செய்திகள்