தீயணைப்பு ஒத்திகைக்காக ரூ.16 கோடி செலவில் 3 மாடி கட்டிடம்

தீயணைப்பு ஒத்திகைக்காக ரூ.16 கோடி செலவில் 3 மாடி கட்டிடம் கட்ட மும்பை மாநகராட்சி திட்டமிட்டுள்ளது.

Update: 2018-04-16 22:53 GMT
மும்பை,

மும்பையில் கடந்த ஆண்டு 4 ஆயிரத்து 790 தீ விபத்துகள் நடந்துள்ளன. கடந்த 4 மாதங்களில் மட்டும் மும்பையில் நடந்த தீ விபத்துகளில் 32 பேர் பலியாகி உள்ளனர். மும்பையில் உள்ள நெருக்கடி மிகுந்த குடிசை பகுதிகள், வான் உயர கட்டிடங்கள், ஓட்டல்கள், சட்டவிரோத கட்டிடங்களில் ஏற்படும் தீ விபத்துகள் தீயணைப்பு துறையினருக்கு மிகப்பெரிய சவலாக விளங்குகின்றன.

இந்தநிலையில் தீயணைப்பு வீரர்கள் தீயணைப்பு ஒத்திகையில் ஈடுபடும் வகையில் வடலாவில் 3 மாடி கட்டிடம் கட்ட மாநகராட்சி திட்டமிட்டு உள்ளது.

ரூ.16 கோடி செலவில் கட்டப்பட உள்ள இந்த கட்டிடத்தில் ஒத்திகைக்காக பல்வேறு வசதிகள் செய்யப்பட உள்ளது. இது குறித்து தீயணைப்பு துறை உயர் அதிகாரி ஒருவர் கூறும்போது:-

இதுபோன்ற ஒத்திகை மையங்கள் சுவீடன், சிங்கப்பூர் உள்ளிட்ட நாடுகளில் உள்ளன. ஆபத்து காலங்களில் எப்படி செயல்படவேண்டும் என்பது குறித்த பயிற்சி தீயணைப்பு வீரர்களுக்கு தேவை.இவ்வாறு அவர் கூறினார்.

மேலும் செய்திகள்