கோவில்பட்டியில் வீரன் சுந்தரலிங்கம் பிறந்த நாள் விழா சிலைக்கு அரசியல் கட்சியினர் மாலை அணிவிப்பு

கோவில்பட்டியில் வீரன் சுந்தரலிங்கம் பிறந்த நாள் விழா கொண்டாடப்பட்டது. அவரது சிலைக்கு பல்வேறு அரசியல் கட்சியினர் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.

Update: 2018-04-16 23:00 GMT
கோவில்பட்டி, 

சுதந்திர போராட்ட தியாகி வீரன் சுந்தரலிங்கம் பிறந்த நாள் விழா நேற்று கொண்டாடப்பட்டது. இதையொட்டி கோவில்பட்டி புது ரோடு, எட்டயபுரம் ரோடு சந்திப்பு பகுதியில் உள்ள அவரது சிலைக்கு செய்தி விளம்பர துறை அமைச்சர் கடம்பூர் ராஜூ, ஆதி திராவிடர் பழங்குடியினர் நலத்துறை அமைச்சர் ராஜலட்சுமி ஆகியோர் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.

அ.தி.மு.க. மாநில இளைஞர் மற்றும் இளம்பெண்கள் பாசறை துணை செயலாளர் சின்னத்துரை, முன்னாள் எம்.எல்.ஏ.க்கள் மோகன், சின்னப்பன், மாவட்ட துணை செயலாளர் தங்க மாரியம்மாள், நகர செயலாளர் விஜய பாண்டியன், ஒன்றிய செயலாளர் அய்யாத்துரை பாண்டியன், பாண்டவர்மங்கலம் கூட்டுறவு சங்க தலைவர் அன்புராஜ், பஞ்சாயத்து செயலாளர் ரமேஷ், அமைப்புசாரா ஓட்டுனர் அணி ஒன்றிய துணை செயலாளர் செண்பகமூர்த்தி மற்றும் பலர் கலந்து கொண்டனர்.

வீரன் சுந்தரலிங்கம் சிலைக்கு அம்மா மக்கள் முன்னேற்ற கழகம் சார்பில், தென் மண்டல அமைப்பு செயலாளர் மாணிக்கராஜா, தகுதி நீக்கம் செய்யப்பட்ட எம்.எல்.ஏ.க்கள் தங்க தமிழ்செல்வன், சுந்தரராஜ், உமா மகேசுவரி, பழனியப்பன், நகர செயலாளர் வேல்முருகன், ஒன்றிய செயலாளர் ஈசுவர பாண்டியன் உள்ளிட்டவர்கள் அவரது சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.

தி.மு.க. சார்பில், வடக்கு மாவட்ட பொறுப்பாளர் கீதாஜீவன் எம்.எல்.ஏ., நகர செயலாளர் கருணாநிதி, ஒன்றிய செயலாளர் முருகேசன், நெசவாளர் அணி ராமர் உள்ளிட்டவர்கள் அவரதப சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.

விடுதலை சிறுத்தைகள் கட்சி சார்பில், வடக்கு மாவட்ட செயலாளர் கதிரேசன், நகர செயலாளர் கருப்பசாமி, மாநில வக்கீல் பிரிவு துணை செயலாளர் பெஞ்சமின் பிராங்கிளின் உள்ளிட்டவர்களும்,

பா.ம.க. சார்பில், மாநில துணை செயலாளர் ராமச்சந்திரன், மாவட்ட செயலாளர் வினோத்குமார், துணை செயலாளர் மாரிமுத்து, மகளிர் அணி ரஞ்சிதமணி உள்ளிட்டவர்களும் வீரன் சுந்தரலிங்கம் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.

ஆதி தமிழர் கட்சி சார்பில், மாநில துணை செயலாளர் திலீபன், தேவேந்திரகுல வேளாளர் கூட்டமைப்பு சார்பில், மாவட்ட செயலாளர் வக்கீல் பாரத்குமார் உள்ளிட்டவர்களும்,

இந்திய கம்யூனிஸ்டு கட்சி சார்பில் மாவட்ட செயலாளர் அழகுமுத்துபாண்டியன், தாலுகா செயலாளர் பாபு, மாவட்ட குழு உறுப்பினர் பரமராஜ் உள்ளிட்டவர்களும்,

த.மா.கா. சார்பில் நகர செயலாளர் ராஜகோபால், மாவட்ட துணை தலைவர் பால்ராஜ், முன்னாள் கவுன்சிலர் என்ஜினீயர் தவமணி உள்ளிட்டவர்களும்,

நாம் தமிழர் கட்சி சார்பில் மாநில ஒருங்கிணைப்பாளர் வியனரசு, மாவட்ட தலைவர் மாரியப்பன், ராஜேஷ் கண்ணன் உள்ளிட்டவர்களும்,

ச.ம.க. சார்பில் மாவட்ட அவை தலைவர் பாஸ்கர், ஒன்றிய செயலாளர் ஆனி முத்துராஜ், நகர செயலாளர் முத்து கணேஷ், தொண்டர் அணி தனபால் உள்ளிட்டவர்களும் வீரன் சுந்தரலிங்கம் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.

புதிய தமிழகம் கட்சி சார்பில், கோவில்பட்டி ரெயில் நிலையம் முன்பிருந்து ஏராளமான பெண்கள் பால்குடம் எடுத்து முக்கிய வீதிகளின் வழியாக ஊர்வலமாக வந்து, வீரன் சுந்தரலிங்கம் சிலைக்கு அபிஷேகம் செய்தனர். வடக்கு மாவட்ட செயலாளர் அன்புராஜ், மாவட்ட இளைஞர் அணி செயலாளர் கிரிபாலன், ஒன்றிய செயலாளர்கள் லாசர், உமையணன், பேச்சிமுத்து உள்பட பலர் கலந்து கொண்டனர்.

இதேபோன்று தெற்கு திட்டங்குளம், இலுப்பையூரணி, கூசாலிபட்டி, பாண்டவர்மங்கலம் உள்ளிட்ட பகுதிகளில் இருந்தும் ஏராளமான பெண்கள் பால்குடம் எடுத்து ஊர்வலமாக வந்து, வீரன் சுந்தரலிங்கம் சிலைக்கு அபிஷேகம் செய்தனர். முன்னதாக காலையில் வீரன் சுந்தரலிங்கம் சிலை பாதுகாப்பு பராமரிப்பு அறக்கட்டளை தலைவர் மாரியப்பன் தலைமையில், சிலை முன்பு பொங்கலிட்டு சிறப்பு வழிபாடு நடத்தினர். மாவட்ட கூடுதல் போலீஸ் சூப்பிரண்டு பத்மாவதி, கோவில்பட்டி துணை போலீஸ் சூப்பிரண்டு ஜெபராஜ் தலைமையில் ஏராளமான போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.

மேலும் செய்திகள்