மும்பை மாநகராட்சி மருத்துவமனைகளில் சிகிச்சை பெறுபவர்களில் உளவியல் சார்ந்த நோயால் 31 சதவீதம் பேர் பாதிப்பு
31 சதவீதம் பேர் உளவியல் சார்ந்த நோயால் பாதிக்கப்பட்டு இருப்பதாக ஆய்வு அறிக்கையில் தகவல் வெளியாகி உள்ளது.
மும்பை,
மும்பை மாநகராட்சி மருத்துவமனைகளில் சிகிச்சை பெறுபவர்களில் 31 சதவீதம் பேர் உளவியல் சார்ந்த நோயால் பாதிக்கப்பட்டு இருப்பதாக ஆய்வு அறிக்கையில் தெரியவந்தது.
மும்பை மாநகராட்சியில் 175 ஆரம்ப சுகாதார மையங்கள், 15 இரண்டாம் நிலை ஆஸ்பத்திரிகள் மற்றும் 4 பெரிய ஆஸ்பத்திரிகள் உள்ளன. இந்தநிலையில் மும்பை மாநகராட்சி கமிஷனர் அஜாய் மேத்தா இந்த ஆஸ்பத்திரிகளில் சிகிச்சை பெறுபவர்கள் குறித்து ஆய்வு நடத்துமாறு சுகாதாரத்துறை அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார்.
இதன்படி கடந்த 2015 முதல் 2017-ம் ஆண்டு வரையிலான 2 ஆண்டுகளில் சிகிச்சைபெற்ற நோயாளிகள் குறித்து அதிகாரிகள் ஆய்வு மேற்கொண்டனர். இந்த ஆய்வு முடிவில், மும்பை மாநகராட்சி ஆஸ்பத்திரிகளில் சிகிச்சை பெறுபவர்களில் அதிகபட்சமானோர் உளவியல் சார்ந்த நோயால் பாதிக்கப்பட்டவர்கள் என்பது தெரியவந்தது. இவர்கள் மட்டும் 31 சதவீதம் இருப்பதை அதிகாரிகள் கண்டறிந்தனர்.
ரத்த அழுத்தம் மற்றும் நீரிழிவு நோய்களுக்கு தலா 23 சதவீதம் பேரும், விலங்குகளால் காயம்பட்டவர்கள் 9.95 சதவீதம் பேரும் சிகிச்சை பெற்றுவருவதாக ஆய்வு அறிக்கை கூறியது. இந்த ஆய்வின் மூலம் எந்தெந்த நோய்களுக்கு அதிகளவு மருந்துகள் தேவைப்படும், அதற்கு எவ்வளவு பணம் ஒதுக்க வேண்டும் என்பதை கண்டறிய முடிந்ததாக அதிகாரிகள் தெரிவித்தனர்.