கர்நாடக சட்டசபைக்கு மே 12-ந் தேதி தேர்தல்; வேட்பு மனு தாக்கல் இன்று தொடங்குகிறது
வேட்பு மனு தாக்கல் இன்று தொடங்குவதால் தேர்தல் அலுவலகங்களை சுற்றிலும் 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
பெங்களூரு,
கர்நாடக சட்ட சபைக்கு ஒரே கட்டமாக அடுத்த மாதம் (மே) 12-ந் தேதி தேர்தல் நடைபெறுகிறது. இதையொட்டி இன்று (செவ்வாய்க் கிழமை) வேட்பு மனு தாக்கல் தொடங்குகிறது. இதனால் தேர்தல் அலுவலகங்களை சுற்றிலும் 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
இதற்கான அறிவிப்பை கடந்த மாதம் (மார்ச்) 27-ந் தேதி தேர்தல் ஆணையம் வெளியிட்டது. ஏப்ரல் 17-ந் தேதி (அதாவது இன்று) வேட்புமனு தாக்கல் தொடங்கும் என்றும் அறிவிக்கப்பட்டது. அரசியல் கட்சிகள் தேர்தலுக்கு தயாராகும் பணிகளில் தீவிரமாக ஈடுபட்டுள்ளன. இந்த நிலையில் சட்டசபை தேர்தலுக்கான வேட்புமனு தாக்கல் இன்று(செவ்வாய்க்கிழமை) மாநிலம் முழுவதும் தொடங்குகிறது.
இந்த நிலையில் அரசியல் கட்சிகளின் பிரதிநிதிகளுடன் பெங்களூரு மாநகராட்சி கமிஷனர் மஞ்சுநாத் பிரசாத் பெங்களூருவில் நேற்று ஆலோசனை நடத்தினார்.
இந்த கூட்டத்திற்கு பின் மஞ்சுநாத் பிரசாத் நிருபர் களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-
கர்நாடக சட்டசபை தேர்தலுக்கான வேட்புமனு தாக்கல் நாளை (இன்று) தொடங்குகிறது. காலை 11 மணிக்கு மனு தாக்கல் செய்யும் பணி தொடங்கப்படுகிறது. அதற்கு முன்பாக அரசாணை பிறப்பிக்கப்படும். பொது வேட்பாளர்கள் டெபாசிட்டாக ரூ.10 ஆயிரமும், தலித் மற்றும் பழங்குடியின வேட்பாளர்கள் ரூ.5 ஆயிரமும் செலுத்த வேண்டும்.
இந்த மனு தாக்கல் செய்யும் பணி வருகிற 24-ந் தேதி வரை நடைபெறும். மறுநாள் 25-ந் தேதி மனுக்கள் பரிசீலனை நடைபெறும். மனுக்களை வாபஸ் பெற 27-ந் தேதி கடைசி நாள் ஆகும். ஞாயிற்றுக்கிழமை மற்றும் அரசு விடுமுறை நாட்களில் மனு தாக்கல் செய்ய முடியாது. தினமும் காலை 11 மணி முதல் மதியம் 3 மணி வரை மனு தாக்கல் செய்யலாம்.
வேட்பாளர்களின் செலவு கணக்குகளை கண்காணிக்க தனி குழுக்கள் அமைக்கப்பட்டு உள்ளன. வேட்பாளர்கள் பயன்படுத்தும் பொருட்களுக்கு சந்தை மதிப்பு மற்றும் அரசு மதிப்பு தயாரிக்கப்பட்டு வருகிறது. கடந்த ஜனவரி 23-ந் தேதி முதல் வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்கும் பணி தொடர்ச்சியாக நடைபெற்று வருகிறது. வாக்காளர் பட்டியலில் சுமார் 2 லட்சம் பேர் புதிதாக சேர்க்கப்பட்டுள்ளனர். துணை வாக்குச்சாவடிகளை அமைக்க தேர்தல் ஆணையத்திடம் அனுமதி கேட்கப்பட்டுள்ளது. இவ்வாறு மஞ்சுநாத் பிரசாத் கூறினார்.
பெங்களூரு மாநகராட்சி பகுதியில் உள்ள 8 மண்டல அலுவலகங்கள், மாவட்ட கலெக்டர் அலுவலகம், தாலுகா அலுவலகங்களிலும் வேட்பாளர்கள் வேட்புமனு தாக்கல் செய்ய ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. அதேப் போல் மாநிலம் முழுவதும் கலெக்டர் அலுவலகங்கள், தாலுகா அலுவலகங்களிலும், மாநகராட்சி பகுதிகளில் மாநகராட்சி அலுவலகங்களிலும் வேட்பாளர்கள் வேட்பு மனுவை தாக்கல் செய்ய ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
மேலும் வேட்பு மனுக்கள் தாக்கல் செய்யும் பணி நடைபெறும் தேர்தல் அலுவலகங்களை சுற்றி 100 மீட்டர் சுற்றளவுக்கு 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டு உள்ளது. அதன்படி, 17-ந் தேதி (இன்று) காலை 10 மணியில் இருந்து வருகிற 24-ந் தேதி மாலை 6 மணி வரை இந்த 144 தடை உத்தரவு அமலில் இருக்கும். அந்த சந்தர்ப்பத்தில் வேட்பு மனு தாக்கல் செய்யும் அலுவலகங்களை சுற்றி போராட்டம், சாலை மறியலில் ஈடுபடுவதற்கு அனுமதி இல்லை. மேலும், 5 பேருக்கு மேல் கூடுவது, கத்தி உள்ளிட்ட ஆயுதங்களை எடுத்து செல்லவும் அனுமதி இல்லை. இதனை மீறுபவர்கள் மீது சட்டப்படி கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என அறிவிக்கப்பட்டு உள்ளது.
இன்று முதல் வேட்பு மனு தாக்கல் தொடங்குவதால், தேர்தல் அலுவலகங்களில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டு உள்ளது. அத்துடன் மனு தாக்கல் செய்ய வருபவர்களுக்கு பல்வேறு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டு உள்ளன.