காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க கோரி மறியலில் ஈடுபட்ட 177 பேர் கைது
காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க கோரி பெரம்பலூரில் 2 இடங்களில் மறியலில் ஈடுபட்ட மக்கள் சமூக நீதி பேரவையினர் 177 பேரை போலீசார் கைது செய்தனர்.
பெரம்பலூர்,
காவிரி மேலாண்மை வாரியத்தை உடனடியாக அமைக்க கோரியும், தமிழக விவசாயிகளின் வாழ்வாதார பிரச்சினைக்கு தீர்வு காணாத மத்தியஅரசை கண்டித்தும், தமிழ்நாட்டில் மீத்தேன் எரிவாயு திட்டம், ஹைட்ரோ கார்பன் திட்டம், நியூட்ரினோ திட்டம் போன்ற தமிழக மக்களை பாதிக்கும் அனைத்து திட்டங்களையும் கைவிடக்கோரியும் குரும்பா, குருமன்ஸ், குரும்ப கவுண்டர் இன மக்களை ஒருங்கிணைத்த மக்கள் சமூக நீதிபேரவை சார்பில் போராட்டம் நடத்தப்படும் என அறிவித்து இருந்தனர்.
அதன்படி போராட்டம் நடத்துவதற்காக பெரம்பலூர் வடக்குமாதவி சாலையில் கூடினர். பின்னர் அங்கு இருந்து ஊர்வலமாக புறப்பட்டு காமராஜர் வளைவு, பெரியார் சிலை வழியாக சென்று காந்திசிலை வந்தடைந்தனர். இதைத்தொடர்ந்து அவர்கள் அங்கு மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
மறியல் போராட்டத்திற்கு மாநில விவசாய அணி செயலாளர் தியாகராஜன் தலைமை தாங்கினார். மாநில பொருளாளர் சேலம் சுமதி, காவிரி நதிநீர் மீட்புக்கான போராட்டக்குழு பொறுப்பாளர் செல்வராணி, மாவட்ட அவைத்தலைவர் நெற்குப்பை பாலு உள்பட பலர் கலந்துகொண்டனர். போராட்டத்தின்போது, காவிரி தாய் போல வேடமிட்டுவந்த ஒரு பெண்ணை நரேந்திர மோடிஅரசும், கர்நாடக அரசும் சங்கிலியால் கட்டப்பட்டிருந்ததை போல காட்சிப் படுத்தி பங்கேற்று இருந்தனர்.
இதே போல் மக்கள் சமூக நீதி பேரவையினர் பெரம்பலூர் காமராஜர் வளைவு சிக்னலிலும் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். 2 இடங்களிலும் நடைபெற்ற மறியல் போராட்டத்தில் பங்கேற்ற 40 பெண்கள் உள்பட 177 பேரை பெரம்பலூர் போலீஸ் இன்ஸ்பெக்டர் மணிவண்ணன் தலைமையிலான போலீசார் கைது செய்தனர். பின்னர் அவர்களை ஒரு தனியார் மண்டபத்தில் தங்க வைத்தனர். இதைத்தொடர்ந்து மாலையில் அனைவரும் விடுவிக்கப்பட்டனர்.