புதுக்கோட்டை, ஆலங்குடியில் காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வலியுறுத்தி ஆர்ப்பாட்டம்

காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வலியுறுத்தி புதுக்கோட்டை, ஆலங்குடியில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

Update: 2018-04-16 23:00 GMT
புதுக்கோட்டை,

புதுக்கோட்டையில், தமிழ்நாடு உயர்நிலை மற்றும் மேல்நிலைப் பள்ளி பட்டதாரி ஆசிரியர் கழகத்தின் சார்பில் நேற்று காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க மத்திய அரசை வலியுறுத்தி ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. ஆர்ப்பாட்டத்திற்கு மாவட்ட தலைவர் செல்வேந்திரன் தலைமை தாங்கினார். மாவட்ட செயலாளர் குமரேசன் ஆர்ப்பாட்டத்தை தொடங்கி வைத்து பேசினார். இதில் மாவட்ட சட்ட செயலாளர் ரெங்கராஜு, தலைமை நிலைய செயலாளர் குரு.மாரிமுத்து, செய்தி தொடர்பாளர் பாலசுப்பிர மணியன், மாவட்ட பொருளாளர் முத்துகருப்பன் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.

இதேபோல ஆலங்குடி வடகாடு முக்கத்தில் இந்திய தேசிய மாதர் சங்கத்தினர் சார்பில் நேற்று காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வலியுறுத்தி ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. ஆர்ப்பாட்டத்திற்கு ஒன்றிய செயலாளர் இந்திராணி தலைமை தாங்கினார். முத்தமிழ்ச் செல்வி, வாலன்டினா, உஷாதேவி ஆகியோர் முன்னிலை வகித்தனர். சிவகங்கை மாவட்ட இந்திய கம்யூனிஸ்டு கட்சி மாவட்ட செயலாளர் கண்ணகி பேசினார். இதில் நகர பொறுப்பாளர்கள் செல்வம், நூர்ஜகான், அன்னலெட்சுமி, தமிழரசி, சங்க நிர்வாகிகள் மற்றும் பலர் கலந்து கொண்டனர். ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்டவர்கள் காவிரி மேலாண்மை வாரியத்தை அமைக்க மத்திய, மாநில அரசுகள் உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோஷங்களை எழுப்பினர். 

மேலும் செய்திகள்