ரேஷன் கடையில் அத்தியாவசிய பொருள் வினியோகத்தை முறைப்படுத்தக்கோரி சாலை மறியல்
ரேஷன் கடையில் அத்தியாவசிய பொருள் வினியோகத்தை முறைப்படுத்தக்கோரி கிராம மக்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர்.
திருக்காட்டுப்பள்ளி,
பூதலூர் அருகே ராயந்தூர் கிராமத்தில் உள்ள ரேஷன் கடையில் அரிசி, சர்க்கரை உள்ளிட்ட அத்தியாவசிய பொருட்களை முறையாக வினியோகம் செய்யவில்லை என்றும், அடிக்கடி கடை மூடப்படுவதாகவும் பொதுமக்கள் அதிகாரிகளிடம் புகார் தெரிவித்தனர். ஆனால் நடவடிக்கை எடுக்கப்படவில்லை. இந்த நிலையில் ரேஷன் கடையில் அத்தியாவசிய பொருள் வினியோகத்தை முறைப்படுத்த கோரி ராயந்தூர் கிராம மக்கள் நேற்று பூதலூர்-தஞ்சை சாலையில் ராயந்தூர் பஸ் நிறுத்தம் அருகே மறியலில் ஈடுபட்டனர்.
இதுகுறித்து தகவல் அறிந்த பூதலூர் போலீஸ் இன்ஸ்பெக்டர் கரிகாற்சோழன், சப்-இன்ஸ்பெக்டர் கபீர்தாசன் மற்றும் போலீசார் அங்கு சென்று மறியலில் ஈடுபட்ட கிராம மக்களுடன் பேச்சுவார்த்தை நடத்தினர். இதையடுத்து மறியலை கைவிட்ட கிராம மக்கள், சம்பந்தப்பட்ட அதிகாரிகள் வரும் வரை காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட போவதாக கூறி சாலை ஓரத்தில் அமர்ந்து இருந்தனர்.
போக்குவரத்து பாதிப்பு
இதைத்தொடர்ந்து பூதலூர் வருவாய் ஆய்வாளர் அருண், கிராம மக்களுடன் பேச்சுவார்த்தை நடத்தினார். அப்போது வட்ட வழங்கல் அலுவலர் தஞ்சையில் நடைபெறும் ஆய்வு கூட்டத்திற்கு சென்றிருப்பதாகவும், கோரிக்கை குறித்த மனுவை தாசில்தாரிடம் வழங்கும்படியும் அறிவுறுத்தினார்.
அதன்பேரில் போராட்டத்தை கிராம மக்கள் கைவிட்டனர். கிராம மக்களின் போராட்டம் காரணமாக அப்பகுதியில் அரை மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.