சொத்தில் பங்கு தர பெற்றோர் மறுத்ததால் எலி மருந்தை தின்று பெண் தற்கொலை போலீசார் விசாரணை

பட்டுக்கோட்டை அருகே சொத்தில் பங்கு தர பெற்றோர் மறுத்ததால் எலி மருந்தை தின்று பெண் தற்கொலை செய்து கொண்டார். இதுதொடர்பாக போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Update: 2018-04-16 22:00 GMT
பட்டுக்கோட்டை,

தஞ்சை மாவட்டம் பட்டுக்கோட்டை தாலுகா ஒட்டங்காடு கிராமத்தை சேர்ந்தவர் ராமசாமி. இவருடைய மனைவி கல்யாணி. இவர்களுடைய மகள் சுமதி (வயது 38). சுமதிக்கு திருமணமாகி பட்டுக்கோட்டை நாடி முத்து நகரில் கணவர் பாலசுப்பிரமணியனுடன் வசித்து வந்தார்.

இந்த நிலையில் சுமதி தனது பெற்றோரிடம் குடும்ப சொத்தில் தனக்கு சேர வேண்டிய பங்கை பிரித்து கொடுக்கும்படி கேட்டுள்ளார். இதற்கு அவரது பெற்றோர் மறுத்து விட்டனர். இதனால் மனமுடைந்த சுமதி சம்பவத்தன்று வீட்டில் இருந்த எலி மருந்தை தின்று மயங்கி விழுந்தார். இதில் உயிருக்கு ஆபத்தான நிலையில் இருந்த அவரை உறவினர்கள் மீட்டு தஞ்சை மருத்துவகல்லூரி மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி சுமதி பரிதாபமாக உயிரிழந்தார்.

போலீசார் விசாரணை


இதுகுறித்த புகாரின் பேரில் பட்டுக்கோட்டை நகர போலீஸ் சப்–இன்ஸ்பெக்டர் செங்குட்டுவன் மற்றும் போலீசார் வழக்குப் பதிவுசெய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

மேலும் செய்திகள்