654 ஏழை பெண்களுக்கு தாலிக்கு தங்கம் அமைச்சர்கள் தங்கமணி, சரோஜா வழங்கினர்
நாமக்கல்லில் 654 ஏழை பெண்களுக்கு தாலிக்கு தங்கம் மற்றும் திருமண நிதிஉதவியை அமைச்சர்கள் தங்கமணி, சரோஜா ஆகியோர் வழங்கினர்.
நாமக்கல்,
நாமக்கல் மாவட்ட கலெக்டர் அலுவலக கூட்டரங்கில், சமூக நலத்துறையின் சார்பில் ஏழை பெண்களுக்கு திருமண நிதிஉதவியுடன் தாலிக்கு தங்கம் மற்றும் பயனாளிகளுக்கு விலையில்லா தையல் எந்திரங்கள் வழங்கும் விழா நடந்தது.
விழாவுக்கு மாவட்ட கலெக்டர் ஆசியா மரியம் தலைமை தாங்கினார். பி.ஆர்.சுந்தரம் எம்.பி., எம்.எல்.ஏ.க்கள் கே.பி.பி.பாஸ்கர், சந்திரசேகரன், பொன்.சரஸ்வதி ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
இதில் தமிழக மின்சாரம், மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வைத்துறை அமைச்சர் தங்கமணி, சமூகநலன் மற்றும் சத்துணவுத்திட்டத்துறை அமைச்சர் டாக்டர் சரோஜா ஆகியோர் சிறப்பு அழைப்பாளர்களாக கலந்து கொண்டு 654 ஏழை பெண்களுக்கு மொத்தம் ரூ.2 கோடியே 71 லட்சத்து 50 ஆயிரம் நிதி உதவி மற்றும் 5 கிலோ 208 கிராம் தங்கம் ஆகியவற்றை வழங்கினர்.
இந்த விழாவில் அமைச்சர் தங்கமணி பேசும்போது, நாமக்கல் மாவட்டத்தில் மட்டும் இதுவரை 21 ஆயிரம் ஏழை பெண்கள் திருமண நிதிஉதவித்திட்டத்தின் கீழ் பயன் அடைந்து உள்ளனர். இவர்களுக்கு 100 கிலோ தங்கம் வழங்கப்பட்டு உள்ளது என்றார்.
இதேபோல் அமைச்சர் டாக்டர் சரோஜா பேசும்போது, ‘தாலிக்கு தங்கம் வழங்கும் திட்டத்திற்காக 2018-19-ம் நிதியாண்டிற்கு ரூ.724 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டு உள்ளது. இதேபோல் மாற்றுத்திறனாளிகளுக்காக இந்த ஆண்டு ரூ.545 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டு உள்ளது’ என்றார்.
தொடர்ந்து 200 பயனாளிகளுக்கு தையல் எந்திரங்களையும் அமைச்சர்கள் வழங்கினர்.
இதில் மாவட்ட வருவாய் அலுவலர் பழனிசாமி, மாவட்ட கலெக்டரின் நேர்முக உதவியாளர் (பொது) பால்பிரின்சிலி ராஜ்குமார், மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நல அலுவலர் சுப்பிரமணி, மாவட்ட சமூக நல அலுவலர் டாக்டர் அன்பு உள்பட பலர் கலந்து கொண்டனர்.
தொடர்ந்து புதுச்சத்திரம் ஒன்றியம் செல்லப்பம்பட்டி மற்றும் தாத்தையங்கார்பட்டி ஊராட்சியில் தமிழ்நாடு மாநில ஊரக வாழ்வாதார இயக்கம் மற்றும் மாவட்ட சமூகநலத்துறை இணைந்து நடத்தும் தாத்தையங்கார்பட்டி ஊராட்சி அளவிலான ஆயத்த ஆடை தொழில் மையத்தையும் அமைச்சர்கள் தங்கமணி, சரோஜா ஆகியோர் தொடங்கி வைத்தனர்.