தம்பதி மாயமான வழக்கில் திடீர் திருப்பம் மனைவியை கொன்று விட்டு தலைமறைவான தொழிலாளி கைது
மனைவியை கொன்று விட்டு தலைமறைவான தொழிலாளி கைது செய்யப்பட்டார்.
பெங்களூரு,
துமகூருவில், தம்பதி மாயமான வழக்கில் திடீர் திருப்பமாக மனைவியை கொன்றுவிட்டு தலைமறைவான தொழிலாளி கைது செய்யப்பட்டார். கள்ளத்தொடர்பை கைவிட மறுத்ததால் தீர்த்துக்கட்டியது தெரியவந்துள்ளது.
துமகூரு மாவட்டம் குப்பி தாலுகா சேலூர் போலீஸ் எல்லைக்கு உட்பட்ட பகுதியை சேர்ந்தவர் நரசிம்மமூர்த்தி, கூலித் தொழிலாளி. இவரது மனைவி சாரதம்மா. இந்த நிலையில், கடந்த 5-ந் தேதி நரசிம்மமூர்த்தியின் வீடு பூட்டி கிடந்தது. அதே நேரத்தில் நரசிம்மமூர்த்தி, சாரதம்மா எங்கு சென்றார்கள் என்பது தெரியாமல் இருந்தது. இதையடுத்து, அவர்கள் 2 பேரையும் நரசிம்மமூர்த்தியின் சகோதரர் வெங்கடராமா அக்கம் பக்கத்தில் தேடியும், விசாரித்தும் பார்த்தார். ஆனால் அவர்கள் 2 பேரை பற்றி எந்த தகவலும் அவருக்கு கிடைக்கவில்லை.
இதையடுத்து, நரசிம்மமூர்த்தி, சாரதம்மா மாயமாகி விட்டதாக கூறி சேலூர் போலீஸ் நிலையத்தில் வெங்கடராமா புகார் கொடுத்தார். அதன்பேரில், போலீசார் வழக்குப்பதிவு செய்து 2 பேரையும் தேடிவந்தனர். இந்த நிலையில், நேற்று முன்தினம் மாலையில் சேலூர் பஸ் நிறுத்தத்தில் நின்ற நரசிம்மமூர்த்தியை போலீசார் பிடித்தனர். மேலும் அவரது மனைவி சாரதம்மா பற்றி கேட்டபோது, அவரை கொலை செய்து விட்டதாக நரசிம்மமூர்த்தி கூறினார். அவரிடம் தொடர்ந்து நடத்திய விசாரணையில் திடுக்கிடும் தகவல் வெளியானது.
அதாவது சாரதம்மாவுக்கும், வேறு ஒரு வாலிபருக்கும் இடையே கள்ளத்தொடர்பு ஏற்பட்டுள்ளது. இதுபற்றி நரசிம்மமூர்த்திக்கு தெரியவந்ததும், அந்த வாலிபருடனான கள்ளத்தொடர்பை கைவிடும்படி மனைவி சாரதம்மாவிடம் கூறியுள்ளார். ஆனால் அவர் கள்ளத்தொடர்பை கைவிட மறுத்துவிட்டதாக தெரிகிறது. இதுதொடர்பாக கணவன், மனைவி இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டுள்ளது.
இதனால் கள்ளக்காதலனுடன் சேர்ந்து நரசிம்மமூர்த்தியை கொலை செய்ய சாரதம்மா திட்டமிட்டதாக கூறப்படுகிறது. இதுபற்றி அறிந்த நரசிம்மமூர்த்தி, கடந்த 5-ந் தேதி சேலூர் அருகே உள்ள வனப்பகுதிக்கு சாரதம்மாவை அழைத்து சென்று ஆயுதங்களால் தாக்கி கொலை செய்துள்ளார்.
பின்னர் அவரது உடலை அங்கேயே போட்டுவிட்டு நரசிம்மமூர்த்தி தலைமறைவானது தெரியவந்தது. அதைத்தொடர்ந்து, நரசிம்மமூர்த்தியை போலீசார் கைது செய்தார்கள். மேலும் நரசிம்மமூர்த்தி கூறியப்படி வனப்பகுதிக்கு போலீசார் சென்றனர். அங்கு எலும்பு கூடுகள் மட்டுமே கிடந்தன. சாரதம்மாவின் உடலை வனவிலங்குகள் தின்று இருக்கலாம் என்று போலீசார் கருதுகிறார்கள். இதுகுறித்து சேலூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து கைதான நரசிம்மமூர்த்தியிடம் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த கொலை சம்பவம் சேலூரில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.