வருகிற 20-ந் தேதி வரை பால பணி காரணமாக ரெயில்களின் நேரம் மாற்றம்
ரெயில்வே பால பணிகள் காரணமாக, வருகிற 20-ந் தேதி வரை கோவை ரெயில்களின் நேரம் மாற்றி அமைக்கப்பட்டு உள்ளது.
கோவை,
சேலம் ரெயில்வே கோட்ட மேலாளர் ஹரிசங்கர்வர்மா வெளியிட்டுள்ள செய்திகுறிப்பில் கூறப்பட்டு இருப்பதாவது:-
சேலம் ரெயில் நிலையம் அருகே உள்ள போடிநாயக்கன்பட்டியை சேலம் நகரத்துடன் இணைக்கும் வகையில் சிறிய நீர்வழிப்பாலத்தை பெரிய பாலமாக மாற்றும் பணி தொடங்கப்பட்டு உள்ளது. இந்த பணியின் காரணமாக, வருகிற 20-ந்தேதி வரை எக்ஸ்பிரஸ் ரெயில்கள், பாசஞ்சர் ரெயில்கள் இயக்கப்படும் நேரம் மாற்றி அமைக்கப்பட்டுள்ளன.
சரக்கு ரெயில் போக்குவரத்து வருகிற 20-ந் தேதி முழுமையாக நிறுத்தப்படுகிறது.
ரெயில் எண் 19567 தூத்துக்குடி- ஓகா எக்ஸ்பிரஸ் ரெயில் 55 நிமிடங்கள் தாமதமாக இயக்கப்படும். ரெயில் எண் 22208 திருவனந்தபுரம்- சென்னை ரெயில் 95 நிமிடமும், ரெயில் எண் 12680 கோவை- சென்னை எக்ஸ்பிரஸ் ரெயில் 40 நிமிடமும் தாமதமாக வந்து சேரும். ரெயில் எண் 12679 சென்னை-கோவை எக்ஸ்பிரஸ் ரெயில் 40 நிமிடம் தாமதமாக சென்னையில் இருந்து புறப்படும். ரெயில் எண் 22638 மங்களூரு- சென்னை வெஸ்ட்கோஸ்ட் எக்ஸ்பிரஸ் 70 நிமிடங்கள் தாமதமாக வந்து செல்லும்.
ரெயில் எண் 13351 தன்பாத்-ஆலப்புழா டாடா எக்ஸ்பிரஸ் ரெயில் 120 நிமிடங்கள் தாமதமாக வந்து செல்லும். ரெயில் எண் 12675 சென்னை- கோவை சூப்பர் பாஸ்ட் எக்ஸ்பிரஸ் ரெயில் 30 நிமிடம் தாமதமாகவும், ரெயில் எண் 12243 சென்னை- கோவை சதாப்தி எக்ஸ்பிரஸ் ரெயில் 20 நிமிடம் தாமதமாக இயக்கப்படும். ரெயில் எண் 12244 கோவை-சென்னை சென்ட்ரல் சதாப்தி எக்ஸ்பிரஸ் ரெயில் மாலை 3.20 மணிக்கு பதிலாக 3.40 மணிக்கு 20 நிமிடம் தாமதமாக புறப்படும்.
ரெயில் எண் 11014 கோவை-மும்பை குர்லா எக்ஸ்பிரஸ் ரெயில் 80 நிமிடம் தாமதமாக புறப்படும். ரெயில் எண் 13352 ஆலப்புழா-தன்பாத் எக்ஸ்பிரஸ் ரெயில் 30 நிமிடமும், ரெயில் எண் 12678 எர்ணாகுளம்-பெங்களூரு இடையேயான இண்டர்சிட்டி எக்ஸ்பிரஸ் ரெயில் 30 நிமிடம் தாமதமாக செல்லும். வருகிற 20-ந்தேதி வரை இந்த மாற்றம் அமலில் இருக்கும்.
இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.