பெட்டிக்கடைகளில் மது விற்பதை கண்டித்து கலெக்டரிடம் மனு கொடுத்த விவசாயிகள்
பெட்டிக்கடைகளில் மதுவிற்பதை கண்டித்தும், அவர்கள் மீது நடவடிக்கை எடுக்க கோரியும் தாம்பூல தட்டுடன் விவசாயிகள் சங்கத்தினர் வந்து கலெக்டரிடம் மனு கொடுத்தனர்.
கோவை,
கோவை மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் பொதுமக்களின் குறைதீர்ப்பு கூட்டம் நேற்று நடைபெற்றது. கலெக்டர் ஹரிகரன் தலைமையில் நடைபெற்ற இந்த கூட்டத்தில் அதிகாரிகள் கலந்துகொண்டு மனுக் களை பெற்றனர். தமிழ்நாடு விவசாயிகள் சங்க தலைவர் பழனிசாமி தலைமையில் நிர்வாகிகள் நூதன முறையில் மனு கொடுக்க தாம்பூல தட்டுடன் வந்து இருந்தனர். அதில் வெற்றிலை பாக்கு, பழங்கள் வைக்கப்பட்டு இருந்தன. விவசாயிகள் சங்கத்தினர் கொடுத்த மனுவில் கூறி இருப்பதாவது:-
கோவை மாவட்டம் கருமத்தம்பட்டி, அன்னூர், சூலூர், கோவில்பாளையம் உள்ளிட்ட பகுதிகளில் பெட்டிக்கடைகளில் மதுபான விற்பனை அதிகரித்து வருகிறது. போலீசார் இதனை கண்டுகொள்வதில்லை. இரவு நேர உணவுக்கடைகளிலும் மதுவிற்பனை செய்யப்படுகிறது. வெளி மாநிலம் மற்றும் வெளி மாவட்டங்களில் இருந்து வாங்கி வரப்பட்ட மதுபாட்டில்கள் பதுக்கி வைத்து விற்பனை செய்யப்படுகிறது. இது தொ டர்பாக அந்த பகுதி போலீஸ் துணைசூப்பிரண்டிடம் புகார் அளித்தும் எந்தவித நடவடிக்கையும் எடுக்கவில்லை. பொதுமக்களின் வாழ்க்கையை சீரழிக்கும் மது விற்பனையை தடுத்து நிறுத்த வேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது. இந்த பிரச்சினை தொடர்பாக ஏற்கனவே மனு கொடுத்து இருப்பதாகவும், ஆனால் உரிய நடவடிக்கை எடுக்காததால் தாம்பூல தட்டில் வைத்து மனுவை கொடுத்தாலாவது உரிய நடவடிக்கை எடுப்பார்கள் என்ற நம்பிக்கையில் இவ்வாறு மனு கொடுக்க வந்ததாகவும் விவசாயிகள் சங்க தலைவர் பழனிசாமி கூறினார்.
இந்து உரிமை கழகம் சார்பில், மாநில தலைவர் ஜெ.ஜெகதீசன் மற்றும் நிர்வாகிகள் மதுபாட்டில்களுடன் கலெக்டர் அலுவலகத்துக்கு திரண்டு வந்தனர். கலெக்டரிடம் அவர்கள் அளித்த மனுவில் கூறப்பட்டு இருப்ப தாவது:-
கோவை பேரூர் ரோட்டில் உள்ள செல்வபுரம் பகுதியில் மதுக்கடை பாருக்கு அனுமதி கிடையாது. ஆனால் 24 மணிநேரமும் கள்ளத்தனமாக மது விற்பனை செய்யப்படுகிறது. இந்த கடையில் மது குடித்து நிறையபேர் பாதிக்கப்பட்டுள்ளனர். எனவே இளைஞர்களை மது பழக்கத்தில் இருந்து காப்பாற்ற அந்த மதுக்கடையை அகற்ற வேண்டும்.
இவ்வாறு அந்த மனுவில் கூறப்பட்டுள்ளது.
இந்து மக்கள் கட்சி(தமிழகம்) சார்பில் தேசிய விழிப்புணர்வு யாத்திரை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.இதில் கலந்து கொண்டவர்கள், கலெக்டர் அலுவலகத்துக்கு புனித நீர் மற்றும் தேசிய கொடிகளுடன் வந்தனர். பின்னர். இந்துமக்கள் கட்சி(தமிழகம்) மாநில செயலாளர் கே.ஆர்.சங்கர் தலைமையில் கலெக்டரிடம் அளித்துள்ள மனுவில் கூறப்பட்டு இருப்பதாவது:-
தேசிய விழிப்புணர்வு யாத்திரை நடத்தப்பட்டு நாடு முழுவதும் சுதந்திர போராட்ட தியாகிகளின் நினைவிடங்களுக்கு சென்று வீரவணக்கம் செலுத்தி, புனித மண்ணும், புனிதநீரும் சேகரிக்கப்பட்டு வருகிறது. சுதந்திர போராட்ட தலைவர் பகத்சிங்கிற்கு பிரம்மாண்டமான சிலை அமைக்க வேண்டும். தியாகிகள் நல வாரியம் அமைக்க வேண்டும். சுதந்திர போராட்ட தியாகிகளின் வரலாறு தொடர்பான பிரசாரங்கள் மற்றும் கண்காட்சி நடத்தப்பட்டு வருங்க ால சந்ததிகளுக்கு தெரியப்படுத்த அரசு நடவடிக்கை எடுக்கவேண்டும்.