சிரியா மீதான தாக்குதலை கண்டித்து ஆர்ப்பாட்டம்

சிரியா மீதான தாக்குதலை கண்டித்து சோசலிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சி சார்பில் புதுவை சுதேசி மில் அருகே ஆர்ப்பாட்டம் நடந்தது.

Update: 2018-04-15 22:15 GMT
புதுச்சேரி,

சிரியா மீதான அமெரிக்க உள்ளிட்ட ஏகாதிபத்திய நாடுகள் தாக்குதல் நடத்தி வருகின்றன. இந்த தாக்குதலுக்கு கடும் எதிர்ப்பு கிளம்பியுள்ளது. இந்த தாக்குதலை தடுத்து நிறுத்த இந்திய அரசு அழுத்தம் கொடுக்கக்கோரி சோசலிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சி சார்பில் புதுவை சுதேசி மில் அருகே ஆர்ப்பாட்டம் நடந்தது. ஆர்ப்பாட்டத்துக்கு மாநில செயலாளர் லெனின்துரை தலைமை தாங்கினார்.

ஆர்ப்பாட்டத்தில் ஏ.ஐ.யு.டி.யு.சி. பொதுச்செயலாளர் முத்து, செயலாளர் சரவணன், செயல் தலைவர் சிவசங்கர், தமிழ்நாடு அமைப்புக்குழு உறுப்பினர் அனவரதன், அலுவலக செயலாளர் ஏழுமலை உள்பட பலர் கலந்துகொண்டனர்.ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவர்கள் அமெரிக்க கூட்டுபடையின் தாக்குதலை கண்டித்து கோஷங்களை எழுப்பினார்கள். 

மேலும் செய்திகள்