ஸ்டெர்லைட் எதிர்ப்பு போராட்டத்துக்கு விவசாயிகள் சங்க ஒருங்கிணைப்புக்குழு தலைவர் பி.ஆர்.பாண்டியன் ஆதரவு
தூத்துக்குடி ஸ்டெர்லைட் எதிர்ப்பு போராட்டத்துக்கு தமிழக அனைத்து விவசாயிகள் சங்க ஒருங்கிணைப்பு குழு தலைவர் பி.ஆர்.பாண்டியன் ஆதரவு தெரிவித்தார்.
தூத்துக்குடி,
தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலையை நிரந்தரமாக மூடக் கோரி 16 இடங்களில் மக்கள் தொடர் போராட்டம் நடத்தி வருகின்றனர். இந்த மக்களுக்கு பல்வேறு அரசியல் கட்சியினர், அமைப்பினர் ஆதரவு தெரிவித்து வருகின்றனர். இதனால் போராட்டம் நாளுக்கு நாள் வலுவடைந்து வருகிறது.
இந்த நிலையில் தமிழக அனைத்து விவசாயிகள் சங்க ஒருங்கிணைப்புக்குழு தலைவர் பி.ஆர்.பாண்டியன் தூத்துக்குடிக்கு வந்தார். அவர் போராட்டத்தில் ஈடுபட்டு வரும் தபால் தந்தி காலனி, அ.குமரெட்டியபுரம் உள்ளிட்ட பகுதிகளில் போராட்டத்தில் ஈடுபட்டு வரும் மக்களை நேரில் சந்தித்து ஆதரவு தெரிவித்தார். அவர்களுடன் அமர்ந்து ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிராக கோஷம் எழுப்பினார்.
பின்னர் அவர் கூறும் போது, தூத்துக்குடி மக்கள் பேரழிவை சந்திக்கிறார்கள். இதனால் ஸ்டெர்லைட் ஆலை வருகிற போது எதிர்க்க மனமில்லாத மக்கள், பாதிப்பை உணரும் போது, இந்த ஆலையை உடனடியாக நிரந்தரமாக மூட வேண்டும் என்று மக்கள் தொடர்ந்து போராடி வருகின்றனர். மக்கள் உணர்வுகளுக்கு அரசு மதிப்பளிக்க வேண்டும். தமிழக அரசு ஒரு அவசர சட்டம் கொண்டு வந்து ஆலையை நிரந்தரமாக மூட வேண்டும். தேவைப்பட்டால் அவசர சட்டமன்றத்தை கூட்டி அவசர சட்டத்தை நிறைவேற்றி, மத்திய அரசுடன் பேசி, ஆலையை மூடி போராட்டத்தில் ஈடுபட்டு உள்ள மக்களின் உணர்வுகளுக்கு மதிப்பளிக்க வேண்டும்.
காவிரி மேலாண்மை வாரியம் அமைத்தால்தான் தமிழ்நாடு, கர்நாடகம், கேரளா இடையே சுமூக உறவு இருக்கும். சண்டையிட்டுக் கொள்ளாமல் தண்ணீரை பகிர்ந்து கொள்ள முடியும். உச்சநீதிமன்ற தீர்ப்பை மத்திய அரசு நிறைவேற்ற வேண்டும். சட்டத்துக்கு உட்பட்டு போராட்டம் நடைபெறுவதை தமிழக பா.ஜனதா கட்சியும், பிரதமரும் திசை திருப்ப முயற்சிக்கிறார்கள்.
ரஜினி போன்ற சிலரை வைத்துக் கொண்டு இந்த போராட்டத்தை தீவிரவாத செயலாக சித்தரிக்க முயற்சி செய்வதை கண்டிக்கிறோம். கர்நாடகா மாநிலத்துக்கு காவிரி சொந்தம் இல்லை என்று உச்சநீதிமன்றம் உறுதிபடுத்தி உள்ளது. தொடர்ந்து போராட்டம் நடத்தி வருகிறோம்.
இவ்வாறு அவர் கூறினார்.